ஒழுங்கு, சகிப்புத் தன்மை ஒத்துப்போவது – இவைதான் ஜனநாயகத்தின் அடிப்படை தேவைகளாகும். ஜனநாயகத்தில், மாறுதல்கள் கூடிப் பேசுவதாலும், கோரிக்கைகள் மூலமாகவுந்தான் நிறைவேற்றப் படுகின்றனவே தவிர, வன்முறைச் செயல்கள் மூலமாக அல்ல!

ஜனநாயகத்தின் பொருள் சகிப்புத் தன்மை! நம்மோடு ஒத்துப் போகிறவர்களிடம் நாம் காட்டுகிற சகிப்புத் தன்மை அல்ல! நம்மோடு மாறுபடுகிற – அபிப்பிராய பேதம் கொள்கிறவர்களுடன், நாம் காட்டுகிற சகிப்பபுத் தன்மை: – அதற்குப் பெயர்தான் ஜனநாயகம் என்பது.

ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால், அதற்குப் பின்னணியாக மக்களின் நல்லெண்ணமும் பொறுப்புணர்ச்சியும் இருக்க வேண்டும்.

பாராளுமன்ற ஜனநாயக த்த்துவத்தின் மீது இயங்கி வரும் ஒரு அரசு நிச்சயம் ஒரு எதிர்க் கட்சி தேவை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தட்டிக் கேட்க ஆளில்லாத தனிமனிதன் எதேச்சாதிகாரி ஆகிவிடவதைப் போல – கண்டிக்க பலமான எதிர்க் கட்சி இல்லாத சர்க்க்காரும் சர்வாதிகாரித்தனம் பெற்று விடுகிறது.

சாதாரண மனிதனின் தேவையை எந்த அரசாங்கமும் புறக்கணிக்க முடியாது. ஜனநாயகத்தின் அடிப்படைத் த்ததுவமே இந்தத் தேவையின் மீதுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சுதந்திரமும் ஜனநாயகமும் இன்று மரணப் படுக்கையில் கிடக்கின்றன. அவற்றின் பாதுகாவலர்கள் என்று சொல்லப் படுபவர்களாலேயே அவை மேலும பயங்கரமாகப பழி வாங்கப்படுகின்றன.

இல்லாமையும், ஏழ்மையும், உயர்வும் தாழ்வும் இருக்கும் நாட்டில் எந்த விதமான ஜனநாயகம்ம் நீண்ட நாள் பிழைத்திருக்க முடியாது.

ஜனநாயகத்தைப் பற்றி ஆயிரம் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் சமுதாயத்தின் ஒழுங்கு – அதன் முக்கிய நோக்கம் என்பது நிச்சயம். எந்த அளவுக்கு ஒருசமுதாயத்தில் நிர்ப்பந்தமின்றி ஒழுங்கு முறை தானாக உருவாகிறதோ, அந்த அளவுக்கு அங்கே ஜனநாயகம் வளர்ச்சி பெறுகிறது.

மற்ற எல்லா வழிகளையும்விட ஜனநாயகம் ஒன்றுதான் மனித குலத்தை ஆளக்கூடிய மிக உயர்ந்த மார்க்கம் ஆகும்.

வன்முறைச் செயல்களின் வாழ்வு முடிந்து விட்டதென்றோ, அடியோடு அழிந்து விடுமென்றோ சொல்வதற்கில்லை. என்றுமில்லா வேகத்தோடும், வலிவோடும் அது இன்று தலைவிரித்தாடுகிறது அது அழிக்கப்படவில்லை என்றால், உலகை அது அழித்துவிடும் என்பது நிச்சயம்.

ஜனநாயகம் என்ற சொல், இன்னும் வேறு எதையாவது குறிக்கிறது என்றால், அது குறிப்பது சமத்துவம் என்பதேயாகும். சமத்துவம் – எல்லாரும் வாக்குரிமை பெற்றிருப்பதிலே அல்ல – சமூக பொருளாதார அமைப்பில் எல்லாரும் பெற்றிருக்க ஏற்றத் தாழ்வற்ற நிலை – அதுதான் ஜனநாயகம் குறிக்கும் சமத்துவம் ஆகும்.

வெறுப்பும் – பகையும், வன்முறைச் செயல்களுமே இன்றை நம் பலக்குறைவுக்குக் காரணமாகிவிட்டன. வன்முறைச் செயல்களைப் பின்பற்றுவகிறவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்க முடியாது.

சுதந்திர ஜனநாயக நாடுகளால்தான் உலகில் சுதந்திரமும் ஜனநாயகமும் தழைக்கக உதவ முடியும்.

சமத்துவம் இன்றேல் சுதந்திரமும், ஜனநாயகமும் அர்த்தமற்றவை ஆகிவிடும், சமத்துவமும், மூப் பொருள்களின் உற்பத்ததி ஸ்தானமும் தனியுடமையாய் இருக்கும் வரை நிலைபெறச் செய்ய முடியாத்தாகி விடும்.

படை வலிமையும், சமாதானத்தையும்தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டிருப்பர்களை, பணிவோடும் நட்புரிமையோடும் அணுகி, சண்டையை அடியோடு தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், கொஞ்ச நாட்களுக்குத் தள்ளிப் போடச் செய்யவாவது நமது வலிமையை நாம் பூரணமாக உபயோகித்தோமானால், இந்த இடைக்காலத்திலாவது ஒருவருக்கொருவர் கூட்டுறவோடு நெருங்கி வாழ்வதை உலகம் அறிந்து கொள்ள அது உதவி செய்யக்கூடும்.