நாம் நம்முடைய தேவையும் லட்சியமும் என்ன என்பதைப் புரிந்து கொண்டு, நமது இயல்புக்கு ஏற்ற வகையில் அவற்றை அடையப் பாடுபட வேண்டுமே தவிர, அமெரிக்காவையோ, ரஷ்யாவையோ, மற்ற பிற நாடுகளையோ பார்த்து அவற்றைப்போல நடக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

சுதந்திரத்துக்காக நாம் எந்த விலையும் தரத் தயாராய் இருக்க வேண்டும்! தாய் நாட்டின் விடுதலைக்கு, மக்களின் சுதந்திரத்துக்கு நாம் தருகிற எந்த விலையும் – தியாகமும் -வீண் போகாது.

என்னுடைய நோக்கம் விசாலமானது, ‘தேசீயம்’ – அந்த வார்த்தை மிக்க் குறுகியதாக – குறையுள்ளதாக எனக்குப் படுகிறது. அரசியல் சுதந்திரமும் – விடுதலையும் அவசியந்தான் என்பதில் சந்தேகமில்லை. அவை நம்முடைய லட்சியத்துக்கு நேரான வழிகாட்டிகள். அவ்வளவுதான்! சமூக விடுதலையம் – சமதர்ம வாழ்வும் – சர்க்காரும் இல்லாத எந்த நாடும் மனிதனும் நிச்சயமாக முன்னேற முடியாது.

நான் கம்யூனிஸ்ட் அல்ல! கம்யூனிஸ சித்தாந்தங்களே வேத வாக்கியங்கள் என்று கம்யூனிஸ்ட்கள் பேசிக் கொள்வதை நான் வெறுக்கிறேன். நான் எதை செய்ய வேண்டும் – எப்படிச் சிந்திக்க வேண்டும் என்பதிலே மற்றவர்களின் வற்புறுத்தல்களை – தலையீடுகளை நான் விரும்பவில்லை. அத்தோடு கம்யூனிஸம் வன்முறை கலந்ததாக இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும்!

எது நன்மை தரக் கூடியது என்பது நமக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால், எது தீயது என்று தெரிந்து அதை வாங்கிவிட்டால், அதன் விளைவாக வரும் பல தீமைகளில் இருந்து தப்பலாம்.

உலகில் இன்று இருவேறு சக்திகள் வளர்ந்து வருகின்றன. உயர்ந்த லட்சிய வாழ்வை உருவாக்க உழைக்கின்ற சக்தி ஒன்று. இவை எல்லாவற்றையும் அழித்தொழித்து விட்டு மனித சமுதாயத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லுகின்ற சக்தி இன்னொன்று. இந்த இரு சக்திகளும் இன்று வேகமாக வளர்ந்து வருகின்றன. இரண்டினிடமும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் ஆயுதங்களும் இருக்கின்றன.

ஆசிய மக்களின் பிரச்சினைகள், அவர்களைக் கலக்காமல், அவர்களின் ஆலோசனைகளைக் கேளாமல், அல்லது அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தீர்க்கப்பட முடியாது. ஆசியாவின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற் முடிவுகள், லண்டனிலோ, நியூயார்க்கிலோ, பாரீஸ் பட்டணத்திலோ எடுக்கப்படுவது ஏற்புடையதாகாது என்பதை ஐரோப்பிய நாடுகள் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

வருங்காலம் எப்படி இருக்கும் என்று யாராலும் நிச்சயமாகச சொல்ல முடியாது. இரண்டு பெரிய சக்திகள் இன்று உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன – ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் பின்னாலே மிகப் பெரிய படைபலமும் – பணபலமும் குவிந்து கிடக்கிறது. ஆனால், இன்று உலகை ஆட்டிப் படைத்துக கொண்டிருப்பவை, இந்த இரு நாடுகளும் கொண்டிருக்கிற கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் அல்ல; அவற்றின் பணபலம் – படைபலம் – இவைதான் இன்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன.

ஆக்கிரமிப்பு எப்படிக் கூடாதோ அதேபோலத்தான் எதிலும் அந்நியர் தலையீடும் கூடாது; செயல்களில் மட்டுமல்ல – எண்ணங்களில் – கொள்கைகளில் கூட. இந்த எண்ணங்களில் – கொள்கைகளில் கூட, இந்த லட்சியங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடைப் பிடிக்கப்பட்டால் உலக நெருக்கடி குறையும். போர் ஆபத்து நாங்கும், ஆக்கிரமிப்பும் அந்நியர் தலையீடும் தானே ஒழியும்.

என்னுடைய பாரம்பரியம் என்ன? நான் எதற்கு வாரிசு? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ளர்ந்து வந்திருக்கிற – மனித குல முன்னேற்றத்துக்கு – அதன் மகத்தான சாதனைகளுக்கு – அது கண்ட உயர்ந்த கனவுகளுக்கு – லட்சியங்களுக்கு, அதன் வெற்றிப் பெருமைகளுக்குத், தோல்விப் பிற லாபங்களுக்கு, மனித சிந்தனையின் பேராற்றலுக்கு – இன்னும் இதுபோன்ற பலவற்றிற்கும் – இந்த நாட்டு மக்களைப் போலவே நான் வாரிசு!

இந்த உலகில் மிகப்பெரிய காரியங்கள் நம்மால் நிறைவேற்றப்பட இருக்கின்றன. வீழ்ந்தால் மீள முடியாத பள்ளத்திலே அழுந்தி விடுவோம். எழுந்து நின்றாலோ உலக அரங்கிலே நமக்கோர் உன்னதமான இடம் கிடைக்கும்.

கடவுளை மறக்கலாம் – மனிதனை மறக்க முடியாது. மனிதனை – மனித சக்தியின் ஆற்றலை மறந்துவிட்டு, நிராசையின் எல்லைக்கு வந்து விட்டால், அப்புறம் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும்.

பலர் பாராட்டப் பெற்றிருக்கிறார்கள். சிலர் போற்றிப் புகழப்பட்டிருக்கிறார்கள். ஆனால் என் மீதோ இந்தியாவின் சகல பகுதி மக்களும் அளவின்றி அன்பைச் சொரிந்திருக்கிறார்கள். நான் இதை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். என்னுடைய வாழ்நாளில் மீதிப் பகுதியையும், இந்த நாட்டுக்கு – இத நாட்ட மக்களின் அன்புக்கு உரியவனாகத் கழிக்க வேண்டும் என்பதுதான் எனக்குள்ள ஒரே ஆசை!

நான் மதவாதியல்ல. மதக் கோட்பாடுகள் என் மனதைக் கவர்ந்ததில்லை. மரணத்திற்குப் பிறகு மனிதன் நிலை என்ன என்பைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இன்றையப் பிரச்சனைகள் எனக்குப் போதுமானவையாய் இருக்கையில், எதிர்காலம், போதுமானவையாய் இருக்கையில், எதிர்காலம், மரணத்திற்குப் பிறகு மனிதன் நிலை, எனக்குப் பிறகு எனது புகழ் வாழ்வு இவை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்குள்ள கவலையெல்லாம், இந்த நாடும் மக்களும், முன்னேற்றப் பாதையில் மேலும் தொடர்ந்து செல்ல வேண்டும், நான் முடிக்க நினைத்த பணிகள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.

வரலாற்றின் வழி நெடுகத் தொடர்ந்து வரும் சங்கிலிப் பிணைப்பில் ஒரு அங்கமாக நானும் இருப்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இந்தப் பரம்பரைப் புகழில் – பாரம்பரியப பெருமையில் இருந்து விலகிச்செல்ல எனக்கு விருப்பமில்லை.

நம்முடைய மண்ணில் இருந்து எதிரிகள் விரட்டி அடிக்கப் படுகிறவரை, நாம் ஓய்ந்திருக்கப்போவதில்லை. இதற்காக நாம் மிகப் பெரிய தியாகத்தைச் செய்தாக வேண்டும். போர் ஆண்டுக்கணக்கிலே நடக்கலாம். நம்முடைய குறைகளை எண்ணிக் குமுறிக கொண்டிருக்காமல் ஒன்றுபட்டு நிற்போம்!

இடைவிடாது இயங்கிக் கொண்டே இருக்கிற ஒரு உணர்ச்சி என்னுள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. உயர்ந்த செயல்களைச் செய்வதற்கும், சிறந்த புத்தகங்களைப் படிப்பதற்கும், வாழ்க்கையை ரசிப்பதுற்கும் எனக்கு உற்சாகம் அளிப்பது அந்த உணர்ச்சியே ஆகும்.

என்னுடைய வாழ்வில்பல ஆண்டுகள் சிறையில் செலவிடப் பட்டிருக்கின்றன. இது மிகச் சாதாரண விஷயம். ஆனால் துன்பத்தில் துடித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஏழை இந்திய மக்களின் வாழவோடு விளையாட யாரும் நினைக்காதீர்கள். அவர்களுடைய பொறுமையைச் சோதிக்காதீர்கள். திறமையைச் சந்திக்காதீர்கள். வரலாற்றைப் பொய்யாக்காதீர்கள்.

உலக வரலாறுகள் தோல்விகளின் தொகுப்புகளாகவே இருக்கின்றன. இவ்வுலகில் எத்தனையோ சான்றோர்கள் தோன்றி எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்றாலும், இவ்வுலகின் தீமைகள் முற்றிலும் அழிந்தபாடில்லை. இவற்றை எல்லாம் பார்க்கிறபோது என் உறுதி தளர்கிறது என்றாலும், எதிர்காலம் என்ன நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. என்னுடைய உழைப்பு வீண்போகாது என்ற நம்பிக்கை என் உள்ளத்திற்குப் புதிய தெம்பையும் – உற்சாகத்தையும் அளிக்கிறது.

நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது இது தான். தனிப்பட்ட மனிதன் மீதோ, மக்களின் மீதோ, நாட்டின் மீதோ, இயல்பாக எனக்கு எந்த விதமான வெறுப்போ, விரோதமோ கிடையாது. சில சமயங்களில் சிலரை நான் குறை கூறியிருக்கலாம். அதுகூட அவர்களிடம் நான் கண்ட குறைபாடுகளுக்காகத்தான் இருக்குமே தவிர, வேறு எந்த குறிப்பிட்ட காரணத்துக்காகவும் இருக்காது. உண்மையில் நான் எவரையும் வெறுப்பத்தில்லை.

கட்டாயமாக மக்கள் மீது திணிக்கப்படும் எந்த சட்டமும் – ஒழுங்கும், மக்களிடையே செலவாக்கை இழந்துவிடும், சட்டம் அதிகார வர்க்கத்தின் மிரட்டலாகவும், ஒழுங்கு அச்சத்தின் உறைவிடமாகவும் ஆகிவிடுகிற போது; சட்டம் ஒழுங்கு – இவை சத்தற்ற சொற்களாகி விடுகின்றன.

மிரட்டிப் பணிய வைக்கச்செய்யும் எந்தச் செயலும் வெறுக்கத் தக்கதாகும். அடக்கு முறையால் உருவாகும் எந்த ஒழுங்கும் – சட்டமும் ராணுவ ஆட்சிக்கே லாயக்கானதாகும்.

பழைய இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிற அறம் – அஞ்சாமை என்ற சொற்களே, இன்று வழக்கில் உள்ள சட்டம் – ஒழுங்கு என்பனவற்றைக் குறிக்கின்றன. சட்டம் வெறும் எழுத்துக் கோர்வை மட்டுமல்ல, அதற்கு மேலான ஒன்று. ஒழுங்கு நிர்பந்தத்தால் உருவாவதல்ல. நெஞ்சில் பிறக்கும் அச்சமின்மையால் வளர்வது. எனவே அஞ்சாமையை வளர்ப்பது – நிர்பந்தத்தால் ஒழுகைத் திணிப்பதைவிட மேலானது.

புரட்சி மனப்பான்மை உடையவர்கள் கூட வன்முறைச் செயல்களை வெறுக்கிறார்கள். வன்முறைச் செயல்களால் புரட்சி இயக்கம் வளராது என்று நம்புகிறார்கள். வன்முறைச் செயல்கள், ஒரு நாட்டில் புரட்சி மனப்பான்மை – எதிர்ப்புணர்ச்சி வளருகிறது என்பதற்கு எடுத்துக்கட்டாகும். இது புரட்சியின் ஆரம்ப கட்டம். இந்த நிலை கடந்தவுடன் அதற்குக் காரணமான வன்முறைச் செயலும் மறைந்து விடுகிறது.

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் அளவிலும், புகழிலும் குறைந்திருப்பதற்குக் காரணம் அவர்கள் தங்கள் கொக்ளைகள் மூலம் மக்களைக் கவர முயற்சிப்பதற்குப் பதிலாக மற்றவர்களைத் தூற்றுவதையே, தங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

நம்முடைய கனவுகளுக்கு உயிர் கொடுக்க நாம் இன்னும் கடுமையாக உழைத்தாக வேண்டும். நாம் காணுகிற இதக் கனவுகள் இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலக முழுமைக்கும் வாழ்வளிக்கக் கூடியவை! ஏனென்றால், உலகின் ஒவ்வொரு நாடும் மக்களும் இன்று மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாடு தனித்தது வாழ முடியும் என்பது இன்று நினைத்துக் கூடபார்க்க முடியாததாகும். சுதந்திரம் துண்டாடப் படமுடியாதது என்று சொல்லப்படுகிறது. சுதந்திரமும் – சுகவாழ்வும் கூட அப்படித்தான்.

நம்முடைய லட்சியங்கள் எவ்வளவுதான் உயர்ந்தவையாக இருந்த போதிலும், அவற்றை அடைய வன்முறைச் செய்கைளைக் கடைப்பிடித்தால் , நம்முடைய சாதனைகள் பெருமளவுக்குத் தாமதப் படுகின்றன என்பதோடு, எந்தத் தீமைகளை எதிர்த்துப் போராடுகிறோமோ, அந்தத் தீமைகளே வளர இடமும் அளித்து விடுகிறோம்.

மனித குலத்துக்கு அன்பு செய்வது என்கின்ற ஒன்றைத்தவிர, மற்ற எத்தனையோ லட்சியங்கள் உலகம் இன்று அடைந்துவிட்டது. மனிதனை மனிதனாகச் செய்யும் மாண்புறு லட்சியங்களின் நிலைக்களமாக இருக்க வேண்டிய உலகம்; வெறுப்பின் – வெறித்தனத்தின் அடித்தளமாக இன்று இருக்கிறது – போர் சத்தியத்தையும் மனித சமுதாயத்தையும் அச்சுறுத்தும் எமனாக இருக்கிறது.

நாம் மேற்கோடும், கிழக்கோடும் – உலக நாடுகள் எல்லாவற்றோடும் நண்பரகளாக இருக்கவே விரும்புகிறோம். மாறி வரும் புது உலகில் தினத்துத நிற்க நினைப்பது என்பது முடியாத காரியம். எழுச்சி பெற்றுவரும் புதிய ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் புதிய லட்சிங்களை உருவாக்க நாம் முடிவு செய்திருக்கிறோம்! எனவே எந்த நாடும, எந்த வழியிலும் நமீது ஆதிக்கம் செலுத்துவதை நாம் நிச்சயமாக ஏற்றுகொள்ள மாட்டோம்! நம்முடைய மக்களுக்கு சுபிட்சமும் – சுகவாழ்வும் கொண்டுவர – நம்மைப் பிணித்திருக்க அரசியல் பொருளாதாரத் தடைகளை- உடைத்தெறிய – காலனி ஆதிக்கத்தையும், அடிமைத்தளையையும் அகற்ற – உழைப்பதற்கு உறுதி கொள்வோம்!

சமாதானத்துக்காக உழைப்பவர்கள், சமாதானம் நிலவுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் முயல வேண்டும்.

ஒவ்வொரு நாட்டின் தேசீய உணர்ச்சியும் மதிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதுவே வெறியாக மாறி சர்வதேச வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

நமது லட்சியத்தை – மனித குல முன்னேற்றத்தை, மற்றவர்களோடு சேர்ந்து நாமும் அடைய ,இடர்மிகுத பாதையில், நீண்ட நெடுந்தூரம் நாம் நடந்தாக வேண்டும்! தூரம் மிக அதிகம். நமக்குள்ள நேரமோ மிகக் குறைவு. எனவே, நமது பயணத்தை நாம் விரைந்து முடித்தாக வேண்டும்.

துன்பத்தில் அழுந்தி நம்பிக்கை இழந்து வாழ்ந்து கொண்டிருப்பதைவிட சாவது மேல். இறப்பது மூலம் புதி உயர்தெழுதல் இடம் பெறுகிறது. போராட்டங்களிலே எப்படிச் சாவது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத தனி மனிதனும் நாடும், எப்படி வாழ்வது என்பதையும் தெரிந்து கொள்ள முடியாது.

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது – பாசத்தால்தான் வெல்ல முடியும்! மனிதனிடம் கோபத்தை – அன்பால், தீமையை நன்மையால் போக்க முடியும்.

நான் குழந்தைகளுடன் கூட இருக்கவும், அவர்களோடு பேசி மகிழவும், சொல்லப் போனால் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடவும் விரும்பகிறேன். இதனால் ஒரு கணம் நான் னது முதுமைப் பருவத்தையும், நான் குழந்தைப் பருவத்தையும் கடந்து எவ்வளவு காலம் ஆயிற்று என்பதையுங்கூட மறந்து விடுகிறேன்.

இந்தியாவுக்குச் சேவை செய்வது என்பது துன்ப்பபடும் கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்வதாகும். கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்வது என்பது, இல்லாமை,ஏழ்மை,அறியாமை, பிணித் துன்பம் ஆகியவற்றிலிருந்து அவர்களுக்கு விடுதலை அளிப்பது; எல்லார்க்கும் சமவாய்ப்பு அளிப்பது, – என்பதாகும்.

அமெரக்க மக்கள் உலகின் ண்களுக்குத்தேர்ந்த அறிவுள்ளவர்களாகவும் – தெளிந்த வியாபார மனப்பான்மை உள்ளவர்களாகவும்தான் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் தவறு இல்லை என்றாலும், குடியரசுக் கோட்பாடுகளில் அசையாத நம்பிக்கையும் தயாள சிந்தையும் அன்புள்ளமும் கொண்டர்கள் அமெரிக்க மக்கள் என்பதையும் உலகம் அறிந்து கொள்ள வேண்டும். ‘சுதந்திரம் – சனநாயகம், சமத்துவம்’ என்னும் லட்சியங்களில் நீங்காப் பற்றுள்ள அமெரிக்க மக்களை நான் சென்ற இடமெல்லாம் கண்டேன். அமெரிக்காவின் வலிமைக்கும் வளத்துக்கும் இதுதான் காரணம் என்பதை உணர்ந்தேன். சுதந்திர வேட்கையும் சமாதான ஆர்வமும், திறந்த மனமும் அமெரிக்க மக்களைப் பழக்கத்துக்கு இனியவர்கள் ஆக்குகின்றன.

நூற்றம்பைது – இருநூறு ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய முன்னேற்றம் எப்படி முடிந்தது அமெரிக்காவால்? நிச்சயமா இதற்கொரு அடிப்படைக்காரணம் இருந்தே ஆக வேண்டும்! உலகின் உயர்ந்த இடத்தைப்பிடித்திருக்கும் அமெரிக்காவின் இந்த வளர்ச்சி போதிக்கும் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பற்றி ஒவ்வொருக்கும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்! ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழமையிலும், வெற்றி தோல்விகளிலும் ஊறிப்போன இந்தியாவும் – புதிய லட்சியங்கள் ஆக்க சக்கிகளின் விளைநிலமாக இருக்கிற அமெரிக்காவும், சந்தித்து நட்புறவு கொள்வது இருநாடுகளுக்கு மட்டுமல்ல உலக முழுமைக்கும் நலம் பயப்பதாகும்.

எதிர்காலம் இனிமை நிறைந்ததாக,இளைப்பாறி ஓய்வெடுத்துக்கொள்ள ஏற்றதாக இல்லை. சொல்லப்போனால், இதுவரை நாம் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகளும், இனி வருங்காலத்தில் நமது லட்சியங்கள் வெற்றிடைய நாம் எடுத்துக் கொள்ளப் போகிற உறுதிமொழிகளும் வெற்றி பெற நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டிய காலமாகத்தான் எதிர்காலம் இருக்கிறது.

சுதந்திர இந்தியா, ஆக்கிரமிப்புக்உ எதிராக எடுக்கப்படுகிற எந்த முயற்சியிலும், பரஸ்பரம் பாது காப்பாகவும், பொருளாதார வளர்ச்சிக்காகும், விடுதலை பெற்ற எந்த நாட்டோடும் சேர்ந்து கொண்டு உழைப்பதிலே, தன்னை மகிழ்ச்சியோடு ஈடுபடுத்திக் கொள்ளும். சுதந்திரம் – சனநாயகம் இவற்றின் அடிப்படையில் உயர்ந்தோர் உலக நீதியை உருவாக்க இந்தியா முயலும். உலக மக்கனின் சிந்தனை வளத்தையும், ஆற்றலையும் துணை கொண்டு மனித குல முன்னேற்றத்துக்கு – வளர்ச்சிக்கு பாடுபடும்.

நாம் நம்முடைய உறுதியில் தளராதிருக்க வேண்டும். நமது நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க முனைந்து முன்நிற்க வேண்டும். தன்னுடைய கௌரவத்தைப் பாதிக்கும் எந்தச் செயல்யையும் எந்த நாடும் தாங்கிக் கொள்ளாது. நம்முடையதோர் சுதந்திர நாடு – நாமந்த சுதந்திரத்தைக் காக்க உறுதியாக நிற்போம்! நம்மில் ஒவ்வொருவரும் நமது சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தேவையான விலையைத் தருவோம்!

வலிமை வேறு, வலிமையை முரட்டு வழிகளில் பயன்படுத்துவது வேறு. காந்தியடிகளை யாரும் முரட்டு மனிதர் என்று சொல்ல முடியாது. சாந்தத்தின் – சமாதானத்தின் உருவமாக இருந்தவர் காந்தியடிகள். காந்தியடிகளை யாரும் வலிமையற்ற மனிதர் என்றும் சொல்லவிட முடியாது. இந்தியாவிலேயே – ஏன் உலகிலேயே தோன்றிய மிகவும் வலிவுடைய மனிதர் அவர். இத்தகைய விசித்திரமான வலிமைதான் தன்னலமற்ற தியாகந்தான், பகைவரிடமும் , நட்புரிமை கொண்டாடுகிற பணிவும்- இனிமையுந்தான் – அவரை வலிமை உடையவர் ஆக்கின. அவரோடு, அல்லது அவருக்குக் கீழ் பணிபுரிகின்ற பேறு பெற்ற நாம், அவரோடு வைத்து எண்ணத் தக்கவர்கள் அல்ல என்றாலும், அவருடைய உபதேசங்களை ஓரளவுக்கு நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம்; ஆகையால் நாமும் வலிமை உடையவர்களாக ஆகவே முயலுவோம் – முரட்டு மனிதர்கள் ஆகாதிருப்போம்.

அநாதை விடுதி, கைம்பண் நிலையம் – என்ற பெயர்களையே நான் வெறுக்கிறேன். சில பயிற்சி நிலையங்களை நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம். னால் கற்ற பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்ற முத்திரையை குத்திக் கொள்வதைப்போல ‘அநாதை இல்லம்’ போன்ற வார்த்தைகளை – சமூக சேவை நிலையங்கள் கைவிட்டு விடுவது நல்லது. நமக்குப் பெற்றோர்கள் இல்லை – நம்மை ஆதரிப்பார் யாரும் இல்லை – நாம் அநாதைகள் என்ற நினைப்பை, வளரும் பிஞ்சு நெஞ்சங்களில் விதைக்க நினைப்பது தவறாகும்.

மிருகத்தனமாக வழிகளில் இறங்கி முரட்டுத் தனமாக நடந்து கள்வதன்மூலம் நம்முடைய இதயத்தையே நாம் இழந்து விடுகிறோம். இது நமகுப் பெரிய இழப்பாகும். உயர் நோக்கமும், சமாதான ஆர்வமும் கொண்ட இந்தியா, ஒரு சமயம் போரிலே ஈடுபட நேரிட்டாலும் தனது இந்த – உயர் நோக்கங்களை விடாது கடைபிடிக்கும் என்றே நான் நம்புகிறேன்.

வகுப்புவாதம் பின்தங்கிய நாடுகளின் அடையாளச் சின்னம், அதை எதிர்த்து நாம் போராடியே தீருவோம். தேசீயம் வகுப்புவாத்தோடு ஒன்றிப் போக முடியாது. தேசீயத்தில், இந்து தேசீயம், முஸ்லீம் தேசீயம், சீக்கிய தேசீயம் என்று எதுவும் கிடையாது. இந்து -முஸ்லீம் – சீக்கியர்கள் என்று பேச ஆரம்பித்து விட்டாலே, இந்தியா – இந்திய தேசீயம் என்பவை மறைந்து விடுகின்றது. இந்திய – சீக்கிய – முஸ்லீம் வகுப்பவாதம்தான் மிஞ்சுகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் நம்மையே கேட்டுக் கொள்ள ஏண்டும். இந்தியா ஒரு நாடாக – ஒரு தேசமாக இருக்க வேண்டுமா அல்லது வலிமையும் திறமையுமற்ற, எளிதில் சிதறுண்டு போகக் கூடிய பத்துப் பதினைந்து தேசங்களாக வண்உமா? இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரும் விடை கண்டாக வேண்டும்? நாம் சாதிக்க வேண்டியவை அநேகம் உள்ளன. நாம் ஒரு மாபெரும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம் – அதிலே ஓரளவு பணயில் ஈடுபட்டிருக்கிறோம். முழு வெறியும் பயனும் அடைவோம் என்ற் நம்பிக்கை நமக்கு இருக்கிறது. ஆனால் அந்த வெற்றி, நாம் நம்முடைய அற்ப ஆசைகளை விட்டொழித்துவிட்டு, இந்திய முன்னேற்றம் என்னும் மிகப்பெரிய லட்சியத்தக்காக, உழைத்தால்தான் – பாடுபட்டால்தான் கிடைக்கும் என்பதைத உணர வேண்டும்.

பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவம், கப்பற்படை, விமானப்படை, புதிய ஆயுதங்கள் – இவற்றைப் பற்றியே சதா சிந்நித்துக் கொண்டிருந்து விட்டு, நாட்டை துன்பத்துக்குள்ளாவதை அநுமதிக்க முடியாது. பஞ்சத்திலும், பட்டினியிலும், சோம்பலிலும் ஆழ்ந்து கிடக்கின்ற மனிதர்களை வைத்துக் கொண்டு, உயர்ந்த விமானப்படை, தரைப்படை, கப்பல்படை, சிறந்த படைக்கருவிகள் ஆகியவற்றைப் பெற்றிருப்பதைக் காட்டிலும் எந்தப் படையும் இல்லாமல் இருப்பதே நல்லதாகும். மற்ற நாடுகளோடு நட்புறவு கொள்வதுதான் இன்றைய உலகின் சிறந்த படைபலம் ஆகும். எளியவர்களாக – வலிமையற்றவர்களாக – சோம்பேறிகளாக நாம் இருந்தால் நமக்கு யாருடைய நட்பும் கிடைக்காது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த நாடு உருவாக்கிய அமைப்பிலே நாமின்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் நமது நாட்டை நேசிக்கிறோம் – நமக்கு மட்டுமல்ல, உலக முழுமைக்குக் இந்த நாடு நல்லதோர் மார்க்கத்தை அருள இருக்கிறது என்று நம்புகிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் சரித்திரம், நாம் என்ன செய்கிறோம், என்ன செய்யப்போகிறோம் என்பதை ஆவலோடு கவனித்துக் கொண்டிருபதாக எனக்குப் படுகிறது. நம்முடைய திறமையும் – பெருமையும் கடுஞ் சோதனையில் இருக்கிறது. நமக்கு வலிமை உண்டு – இந்த நாட்டின் மீது அளவற்ற பற்று உண்டு – எப்படியும் இந்த நாட்டின் மானத்தைக் காப்போம் – அதற்குத் தயாராகவே இருக்கிறோம் என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும்.

ஏகாதிபத்தியம் நமது எதிரியாக இருந்தால் அதை எதிர்த்துப்போராடுவோம்! இனவெறி நமக்கு எதிரியாக இருந்தால் நாம் அதை எதிர்த்துப் போராடுவோம். ஒரு நாடோ, மனிதனோ நம்மைத் தாக்கினால், ந்தாம் எதிர்த்துத் தாக்குவோம்! ஆனால், ஒர நாட்டின் சர்க்காரும்படைகளும் நம்மைத் தாக்குகிறது என்பதற்காக; நாடு முழுவதையுமோ, அதன் எல்லா மக்களையுமோ பகைவர்களாக எண்ணி வெறுப்பது தவறானது – நமது கொள்கைகளுக்கு முரணானது. நம்மை எதிர்ப்பவர்களோடு தான் நமக்குச் சண்டையே தவிர – நமக்கு நண்பர்களாக உள்ள மக்களோடல்ல. ஆக்கிரமிப்பாளர்கள்தான் நமக்குப் பகைவர்களே தவிர – அவர்களின் கலாச்சாரப் பண்பாடுகள் அல்ல.

போர்முனையில் நின்று தீரம்காட்டுபவர்கள் மட்டுமல்லசிப்பாய்கள். இன்றைய நமது நெருக்கடி நிலையில், வயலிலே பணிபுரியும் ஒவ்வொரு விவசாயியும், ஆலையிலே வேலைபார்க்கும் ஒவ்வொரு தொழிலாளியும் சிப்பாய்தான் – இந்தப் போர் முடிந்த பிறகுங்கூட – வயல்களிலும் ஆலைகளிலும் உற்பத்தி பெருக, பெருமளவுக்கு நமது முயற்சி தேவைப்படும்! ஒரு வகையில் இன்று போரபாயம் ஒன்றைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்றாலும் நாமெல்லாம் நாட்டின் பெருமையை உயர்த்த ஒன்றுபட்டு நிற்கும் அரிய சந்தர்ப்பத்தை இப்போரபாயம் உருவாக்கி இருக்கிறது.

ஒரு நாட்டின் வரலாறு என்பது அந்த நாட்டில் வாழ்ந்த புகழ்மிக்க பெரியோர்களின் வரலாறு ஆகும். புகழ் என்கிறபோது நான் குறிப்இடுவது, பழங்காலத்தைப்போல ; மன்னர்களாய், அரசர்களாய், வீர்ர்களாய் வாழ்ந்ததால் வந்த புகழை அல்ல. இந்த நாட்டின நல்வாழ்வை உருவாக்க ஒத்துழைத்ததால் வந்த புகழ் ஆகும். எந்த மனிதர் எல்லோராலும், பாராட்டப்பெற்றார். எந்த மனிதரின் தலைமையின் கீழ் நாடு வழிநடந்தது என்பதைக் கொண்டுதான் சரித்திர காலங்களை நாம் கணக்கிடுகிறோம். பெரிய சிற்பியோ திறமைமிக்க எழுத்தாளனோ அல்லது ஒரு இஞ்சினீயரோ மன்னர்களைவிட, அதிகம் மதிக்கப்பட வேண்டியவர்கள் எனபது என் கருத்தாகும். ஏன் எனில், இவர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு ஆக்க ரீதியில் உதவுகிறார்கள்.

பழங்காலந் தொட்டே புனித யாத்திரை போவோர்களின் பூமியாக இந்தியா இருந்து வந்திருக்கிறது. னால், நாம் ப்போதுமேற்கொண்டிருக்கிற புனித யாத்திரை முற்றிலும் புதுமையானது. எதிர்கால சுபிட்சத்தை அடைய நாம் காலமுணர்ந்து மேற்கொண்டிருக்கிற யாத்திரையாகும் இது. ஏன் எனில் சென்ற காலங்களில் பலமுறை நாம் வழிதவறி அலைந்து தவித்திருக்கிறோம்! மேலும் நாம் வழி தவறிப் போக விரும்பவில்லை. எதிர்காலத்தை இன்பம் நிறைந்ததாக மாற்றி அமைக்க இன்றைய கடமைகளில் நாம் உறுதி கொள்ள வேண்டும்.

உலகத்தை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்கின்ற அல்லது அழிவுப் பள்ளத்திலே ஆழ்த்துகின்ற அளப்பரிய சக்தியை விதி இன்று எந்த அமெரிக்காவின் – ரஸ்யாவின் கையில் ஒப்படைத்திருக்கிறதோ – அந்த அமெரிக்காவைம் ரஷ்யாவையும் நான் வேண்னிக் கேட்டுக் கொள்கிறேன, “உங்களுடைய அணு ஆயதச் சோதனைகளை நிறுத்துங்கள். அதன் மூலம் தீமைகளை ஒழித்துக் கட்ட முடிவு செய்து விட்டதுடன், படைக் குறிப்பை அமுலாக்கவும் உதவத் தயாராய் இருக்கிறோம் என்பதை மக்கள் எல்லாம் அறியச்செய்யுங்கள். அப்படிச் செய்துவிட்டால், அடுத்த விநாடியே மனித மனத்தை அழுத்திக் கொண்டிருக்கின்ற சுமை குறைந்து விடும். வெளிப்டையான மாற்றங்கள்மட்டும்போதாது. மனித மனத்தில் இருந்து அச்சத்தையும், தொடர்ந்து மனித இனத்தையே ஆபத்துக்குள்ளாக்குகின்ற துன்ப நினைவுகளையும், மாற்றி அமைக்கின்ற முயற்சியும் தேவை. வருங்கால சந்ததிகளை போர் அயாயத்தினின்றும் பாதுகாப்பது அடிப்படை மனித உரிமைகளில் நம்பிக்கை கொள்ளச்செய்வது; அதற்காக சமாதானத் தோடும், சகிப்புத் தன்மையோடும் அண்டை அயல் நாடுகளோடு நண்பர்களாக வாழ்வது ஆகிய நமது லட்சியங்களை, ஐக்கியநாடுகள் சபை சாஸனம் அங்கீகரித்திருக்கிறது. இன்று நாம் உலகில் மிக உயர்ந்ததாக நினைப்பது சமாதானம். சாமாதானம் இல்லையென்றால் நம்முடைய கனவுகள் எல்லாம் அழிந்து ஒழிந்து மண்ணோடு மண்ணாகப் போய்விடும்.