தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திர்ம,தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகத்தில்தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினால்மு, கை கால் முதிலியவற்றாலும் பாபம் செய்து கொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கையும், மனசையும் அவையவங்களையும் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.
எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்படுபவைதாம் ஆசாரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டு விடக்கூடாது.
ஜோதிர்லிங்கம் குளிர்ந்தால் உலகமெல்லாம் குளிரும்; அதற்காகத்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்கிறோம்.
நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிய தண்ணிரில் அமுக்கிவிடவேண்டாம் அப்போது ஜலத்துக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம் பரம லேசாகிவிடும்.
ஏழு அஞ்சில் என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகரஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக் கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைத்துவிடும் என்கிறார்கள்.
பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும் இப்படியே அவன் பக்கமாக நகர்ந்து போய் முடிவில் அவனிடம் ஒட்டிக் கொண்டு ஒன்றாகிவிடவேண்டும.
நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி? கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவிருத்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நிவிருந்தியானால் அயேகமாகப் பூஜையையும் அதோடு விட்டுவிடுவோம். ஆகாவிட்டாலோ ஸ்வாமியையே திட்டுவோம். நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வருவதற்கு வழி என்ன?
ஒரு ராஜகுமாரன் காட்டில் வேடர்கள் மத்தியில் – அதே வேஷத்தில் வளரும்போது தன்னையும் வேடன் என்று நினைத்துக் கொள்கிறான். அதே மாதிரி நாமெல்லாம் ஜவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸரிகளாகவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தாலும் வாஸ்தவத்தில் நாமும் பரமாத்மாவேதான். வேஷம் இப்படியானாலும் நமக்கு உள்ளே இருக்கிற வஸ்து இப்போதும் பரமாத்மாதான்.
ஜசும், ஸபடிகமும் ஒரே மாதிரிரான் வெளிப்பார்வைக்ககு இருக்கின்றன. ஆனால், ஐஸ்தான் உருகி ஜலமாகுமே தவிர ஸ்டிகம் ஜலமாகாது. ஏனென்றால் எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்த வேறே வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறதோ… அதுதான் உருகி மறுபடியும் தான் ஸவயமான பூர்வ ரூபத்தை அடையமுடியும்.
நாம் நல்லது பண்ணிக்கொண்டு போனால் ஈஸ்வரன் நமக்கும் கை கொடுப்பார். அவர்தான் நமக்கு கை கொடுக்கிறார். கால் கொடுக்கிறார். கண் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஆலோசிப்பதற்குப் புத்தியும் கொடுத்திருக்கிறார். இந்த சக்தியும் புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான ஸத்காரியம் செய்ய வேண்டும்.
ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கின்ற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதனால் பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது.
ஈஸ்வரனுக்கு அழுக்குத் துணிகட்டக்கூடாது. நல்ல தூய ஆடையையே ஈசுவரனுக்கு சாத்தும்படி செய்தல் வேண்டும். இந்த தர்ம்ம் சூட்ம்ம், ஷூக்ஷ்மத்தை விட்டு ஸ்தூலத்திற்கு நிறைய காரியங்கள் செய்கிறோம்.
நம்முடைய மத்த்திற்கு வந்தால் இன்னொரு மத்த்தால் வராது. நம்முடைய அனுஷ்தானக் குறைவினால் தான் வரும். உடம்பில் சக்தி குறையும்போது நோய் வருகிறது. வியாதி வருவதற்கு நம்முடைய பலஹீனம்தான் காரணம்.
தனக்கு மிஞ்சித் தர்ம்ம் என்பதற்கு நான் இப்படித்தான் புதுவியாக்கியானம் செய்கிறைனெ; தனக்கு எது உயிர் வாழ்வதற்கு அத்தியவாசியம, எதெல்லாம் இல்லாவிட்டால் உயிர்வாழ முடியாதோ, அதை மட்டுமே அடிப்படைத் தேவைகளை மட்டுமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
எவ்வளவோ பாபம் பண்ணி இந்த ஜன்மாவை அடைந்து கஷ்டப்படுகிறோம் இந்தப்பாபங்களைப் போக புண்ணியம் பண்ணவேண்டும். பாபங்களையெல்லாம் கரைத்துவிடத் தீர்க்கமான தரமங்களைப் பண்ண வேண்டும். அந்தத் தர்மங்களை இந்த உடம்பு இருக்கும்பொழுது செய்ய வேண்டும்.
வியாதி வந்த பின்பு மருந்து சாப்பிட்டுப் போக்கி கொள்ளுவதைவிட வராமலே தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு உபவாஸம் ஒரு பத்தியம், மிகவும் கீழான இடத்தில் மனதை வைத்தால் கீழான பைத்தியம் உண்டாகிறது. மேலான இடத்தில் வைத்தால் மேலான பிரம்மவித்தாக ஆகிறோம். ஆகையால் ஈசுவர சரணாவிந்தத்தைப்பிடித்தால் நமக்கு அப்படிப்பட்ட உயர்ந்த நிலை உண்டாகும்.
நாம் நம்முடைய மனது சுத்தமாக – இருப்பதற்காக , நித்திய சிரேயஸை அடைவதற்காகப் பகவத் பாதத்தை- ஆசார்யரூபமான சரணத்தை – தியானம் பண்ண வேண்டும். மனது அதற்குத்தான் ஏற்பட்ட இடம். எத்தனை நாழிகை செய்ய முடியுமோ அவ்வளவுநாழிகை தியானம் செய்ய வேண்டும்.
குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தைதான் தெய்வம். அவர்களிடத்தில் காமக்குரோதங்கள் இல்லை. குழந்தையாக இரு என்று உபநிஷத் சொல்லுகிறது.
சிவ என்ற இரண்டு அக்ஷரங்களை எப்பொழுது ஸந்தர்ப்பம் நேர்ந்தாலும் உச்சாரணம் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். எந்த ஜன்ம்ம் வந்தால்மு அதைமறக்காமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஜன்மேயில்லாத பரம சாந்து நிலை உண்டாகும்.
ஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள் ஒருவன் எப்பொழுது எதிரில் நின்று கொண்டு பிரபுவை ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டே இருக்கிறான். மற்றொருவன் பேசவே மாட்டன். எதிரில் வரமாட்டான். பிரபு எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறாரோ அந்தக் காரியத்தை செய்வான்.
பொது ஜனங்கள் கிட்ட இருக்கிறவனிடத்திலே தான் பிரபுவுக்குப் பிரியம் என்று நினைத்துகொண்டிருப்பார்கள். ஆனால் வேலை செய்கிறவனிடத்தில் தான் அவருக்குப் பிரியம் இருக்கும். அசடானாயிருந்தால்தான் ஸ்தோத்திரம் பண்ணுபவனிடத்தில் அதிகப் பிரியமாக இருப்பான். அவனைப் போல ஈசுவரன் அசட்டுப் பிரபுவாக இருந்தால் வெறும் ஸ்தோத்திரம் செய்கிறவனிடத்தில் அதிகப் பிரியமாக இருப்பான். அவன் விதித்த கர்மாநுஷடான்களைச் செய்வது தான் பூஜை. அதனால்தான் ‘பரமேஸ்வர ப்ரீத்யாத்தம்’ என்று ஸங்கல்பம் செய்துகொண்டு கர்மாக்களைச்செய்ய வேண்டும்.
மனம் வாக்கு காயம் என்கிறபடி மனத்தால் பகவத் ஸ்மரணம், வாக்கால் மந்திரம், காயத்தால் காரியம் மூன்றையும் சேர்த்துதான் ஆசாரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மந்திரம் அல்லது பகவத் நாம்ம் இல்லாமல் காரியத்தைப ப்ண்ணுவதில் பிரயோசனம் இல்லை.
ஒரு மரத்தில் புஷ்பத்திலிருந்துதான் காயும் பழமும் உண்டாகின்றன. புஷபமாக இருக்கும்போது மூக்குக்கும், பழமாக இருக்கும்போது நாக்குக்கும் ருசியாக இருக்கின்றன. பழம் இனிப்பாக, இருக்கிறது. அந்த இனிப்பு வருவதற்கு முன் எப்படி இருந்தது? பூவில் கசப்பாகவும், பிஞ்சில் துவர்ப்பாகவும், காயில் புளிப்பாகவும் பிறகு மதுரமாகவும் ஆகிறது.
வழுக்கு மரம் ஏறுகிறார்களே அதைச் சறுக்கு மரம் என்று சொல்வதுண்டு. சறுக்கு அதற்கு சுபாவம். சறுக்கிச் சறுக்கி விழுவதைச் சமாளித்துக் கொண்டு பிரயத்தனம் பண்ணி மேலே ஏறினால் வெற்றி உண்டாகும். அப்படியே வாழ்வில் சறுக்குவதும் சுபாவம்.
ஸோமாவரம், குருவாரம், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மௌனம் அநுஷ்டிக்கலாம். ஸோமவரம், குருவாரம் ஆபீஸ் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் மௌனமாயிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம்.
தெய்வத்தின் கருணை நமக்குத் தெரியாது. நமக்கு நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் இரண்டுக்கும் மூலம் அம்பாளுடைய அருள்தான். நல்லது காரணம் இல்லாத அருள், கஷ்டம் ஒரு காரணத்துக்காக ஏற்படுகிற அருள் என்று கொள்ளவேண்டும்.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். குழந்தையே தெய்வமாக வந்துவிட்டது. பிள்ளையாரில், அதனால் அவரை குழந்தை ஸ்வாமியாக தமிழ்நாட்டில் கொண்டாடுகிறோம்.
கஷ்டங்களை கண்ட இடத்தில் போய்ச்சொல்லிக்கொள்ளாமல் – கேட்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்றில்லாமல் பகவானிடம் கஷ்டத்தைச் சொல்லிக் கொள்ளலாம்.
ஆஸ்திக பரம்பரையில் தோன்றிய நமது குழந்தைகளுக்கு, சிறுவயது முதலே நமது பண்புக்குரிய தரும்ம், ஒழுக்கம், பக்தி, ஞானம் முதலியவற்றைக் கடைப்பிடித்து ஒழுக, அனுகூலமான கல்வியைப் போதிக்க வேண்டும்.
தர்ம மர்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட அவனை ஆதரிக்கும். அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகிவிடுவான்.
குழந்தை விஷம்ம் செய்தால் கட்டிப்போடுகிறோம். நம்மடம் ஆசை என்ற விஷயம் இருப்பதலா நம்மை ஈஸ்ரன் கட்டிப் போடுகிறான்.
பசு, லக்ஷ்மியின் வாசஸதானம், விபூதி பசுவின் சாணத்தை அக்கினியிலிட்டு பஸ்ம்மாக்குவதிலிருந்து உண்டாகிறது. மகா பஸ்பமான பரமாத்மாவும் விபூதி எனும் பஸ்பமும் ஒன்றானபடியால் விபூதி அணிவதனால் ஈசுவர சாஷாத்காரம் ஏற்படும்.
எப்போதும் ஆனந்தமாக இருப்பதற்கு எப்போதும் உண்மையாக இருக்கிறவனைப் பிடித்துக் கொள்ள வேண்டும். உண்மையாக இருப்பவர் ஸ்வாமி ஒருத்தர்தான்.
அன்பு செலுத்தும்போது துன்பமே தெரிவதில்லை. ஆனால் கடைசியில் ஒரு நாள் அன்பு செலுத்தப்பட்ட வஸ்துவே நமக்குப் பெரிய துன்பத்தைத் தந்துவிடுகிறது.
விகரகங்களை ஆராதிப்பது போலவே நாம் பிரத்யடசமாக்க் காணும் சகல சம்பத்துகளையும் கொடுக்கும் சூரிய பகவானையும் கடவுள்ம்சமாக நினைத்துத் தொழ வேண்டும்.
கடவுள் கருணையில் கடளுக் கொப்பானவர். ந்திகள் பெருக்கெடுத்து ஜலம் அதிகமாகச் சேருகிற தென்று கடல் பொங்குகிறதா? இல்லையே. ந்திகளைப் பொல் தன்னிடம் ஓடிவரும் பக்தர்களை எதிர்கொண்டும் அழைப்பார் கடவுள்.
மனம் கட்டுப்படுகின்ற வரையில் எல்லோரும் பலவகைப்பட்ட பைத்தியங்களே.
எந்தவித குற்றமும் செய்யாத பாபமற்றவன், எதற்கும் அஞ்ச வேண்டாம். தைரியம் அவன் முகத்தில் தேஜஸாய் ஜொலிக்கும்.
ராமநாமம் என்பதைத் தாரக மந்திரம் என்கிறோம். தாரகம் என்றால் பாவங்களைப் பொசுக்கி மேலே போவது என்று பொருள்.
நீ தருமங்களைச் செய்தால் பலன் எதிர்பார்க்காமல் செய்; பலன் கொடுக்கவேண்டியது ஈசுவரன் என்பது ஈசுவரன் வேலை என்கிறது உபநிஷதம்.
அம்பாளை விட மங்கள வஸ்து இல்லை. ‘ஸர்வ மங்கள மாங்கல்யே’ என்று அம்பாளைச் சொல்வார்கள். அவர்களுடன் சேர்ந்திருப்பதாலே பரமேச்சுவரனும் மங்கள ஸ்வரூபியாகிறார். மங்களமே வடிவமான அம்பிக்கை மகா சுமங்கலி. அவளுடைய சௌமாங்கல்யத்திற்கு எப்படிப் பங்கம் உண்டாக முடியும்? இதனால் தான் ஆலஹாலவிஷம் சாப்பிட்டும் கூடப் பரமேச்வரன் சௌக்யமாகவே இருக்கிறார். ஆசார்யமான (ஸ்ரீ ஆதிசங்கர்ர்) ஸௌந்தர்யலஹரியில் இப்படித்தான் கூறுகிறார்.
கண்ணாடியில் பார்க்கிறோம். அழுக்காக இருந்தால் பாரக்க முடிகிறதா? சுத்தமாகத் துடைத்துவிட்டுப் பார்த்தால் நன்றாகத் தெரியும். சுத்தமாகத் துடைத்த கண்ணாடித்தான் என்றாலும் ஆடிக்கொண்டிருந்தால் உண்மை விளங்காது. அது சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆடாமல் நிலையாகவும் இருக்கவேண்டும். சுத்தமான நிலைத்த கண்ணாடியாக இருந்தால் உண்மை பிரகாசிக்கும். சித்தம் என்பது கண்ணாடி போன்றது. பரம்பொருள் உண்மை.
மெய்யான பொருளை அறிந்து கொள்வதற்காக இருப்பது கல்வி, கல்வியினால் நல்ல குணங்கள் ஏற்பட வேண்டும். கெட்ட குணங்கள் எத்தனைக்கு எத்தனை அதிகமாகின்றதோ அத்தனைக்கு அத்தனை உண்மையான அறிவைவிட்டு விலகிவிலகி ஓட வேண்டியிருக்கிறது.
யாராவது ஒருத்தர் உபந்யாசம் பண்ணிக் கொண்டே இருக்கிறபோது கொஞ்சம் தூற்றல் போட ஆரம்பித்தால் போதும். கேட்கிறவர்கள் பலமாக மழைவந்துவிட்டதைப்போல எழுந்திருந்து ஓட ஆரம்பித்துவிடுவார்கள் யாராவது ஒரு கல்லை எடுத்துக் கூட்டத்தில் போட்டால் கூட உடனே, உபந்யாசமும் ஆச்சு கேட்டும் ஆச்சு. என்று எழுந்து ஓடிவிடுவார்கள். ஆனால் அர்ஜூன்ன் கிருஷ்ணனிடத்தில் உபதேசம் கேட்டானே அந்த உபதேசம் எந்த இடத்தில் நடந்திருக்கிறது? பகவத் கீதை உபதேசத்தில் என்ன விசேஷம் என்றால் அடுத்த கணத்தில் தலை எங்கே போகிறது என்று தெரியாது. தலை போகிற சமயத்தில் சிஷ்யன் உபதேசம் பண்ணு என்று கேட்கிறான். ஆசார்யனும் உபதேசம் செய்திருக்கும்படியான இடம் உண்டோ?
ஒரு கையில் ஒடிந்த தந்தம் என்றால் இன்னொரு கையிலே கொழுக்கட்டை வைத்திருக்கிறார். அதற்குள் தித்திப்பாக இருக்கிற வஸ்துவுக்குப் பெயர் பூர்ணம். பூர்ணம் என்றால் முழுமை. ஒரு கையில் இருக்கிற தந்தம் மூளி, இன்னொன்றிலோ முழுமை. எல்லாம் நிறைந்த பூரணப் பொருள் பிள்ளையாரேதான். இதை அறிந்து கொள்வது தான் பேரானந்தம். ஆனந்தத்துக்கு இன்னொரு பேர் மோதகம், கொழுக்கட்டைக்கும் மோதகம் என்று பெயர்.
கோயில், சர்ச், மசூதி, விஹாரம் முதலிய கட்டடங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படலாம். உள்ளே இருக்கிற மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும் சடங்குகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அனுக்கிரஹம் செய்கிற பரமாத்மா மாறவில்லை.
ருத்ராக்ஷத்தின் பெருமை மிக அதிகம். உலகத்தில் எவ்வளவோ விருஷங்கள் உண்டு. எவ்வளவோ விதமான விதைகள் உண்டு. ருத்ராஷத்தைச சிவ பெருமானுடைய அடையாளமாகப் பெரியவர்கள் சொல்கிறார்கள். ருத்திரனுடைய நேத்ரம் அது. அதைத் தமிழில் திருக்கண்மணி என்று சொல்வார்கள்.
பாபங்கள் இரண்டு தினுசு ஒன்று சரீரத்தால் செய்த பாபகர்மா; இன்னொன்று மனசினால் செய்த பாப சிந்தனை, பாப கர்மாவைப் போக்கிக் கொள்ள புண்ய கர்மா செய்ய வேண்டும். பாப எண்ணங்களைப் போக்கிக் கொள்ள புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பகவானிடம் புதிதாக ஒன்றும் நாம் கேட்டுப்பெற வேண்டியதில்லை. நம்மிடம் இல்லாமல் அவனிடம் உள்ள ஏதோ ஒன்றைக் கேட்க வேண்டியதில்லை. நம்மிடமே இருக்கும்படியான நம் உண்மை ஸ்வரூபத்தை நாம் அறியவில்லைழ
தப்பு பண்ணினவர்களுக்கும் பகவானுடைய தரிசனம் கிடைக்கிறது. பக்தி பண்ணுகிறவர்களுக்கும் கிடைக்கிறது. இது என்ன? என்ற கேள்விக்குச் சமாதானமாக ஒன்று சொல்வார்கள். தபஸ் பண்ணிக் கொண்டிருக்கிறவனுக்கு ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆனாலும் கூட இறைவனுடைய நினைவு பூர்ணமாக வருவதில்லை.
ஏதாவது ஒரு நல்ல விஷயத்திலே நாம் பூர்ணமாக ஈடுபட பழகினால், அப்போது சித்தம் மட்டும் அழுக்குப் படாமல் இருக்கும்.
நெருப்பை வாயால் ஊதக்கூடாது., புருஷன் தீபத்தை அணைக்கக்கூடாது. பெண்கள் பூசணிக்காயை உடைக்கக்கூடாது.
அவசியமில்லாமல் ஏராளமகச் சம்பாதிக்கும் அவசியமில்லாமல் விரயமாகச் செலவழிப்பதும், அல்லது பூதம் காத்த மாதிரி பாங்கில் மூட்டை மூட்டையாகப் போட்டு வைப்பதும் ரொம்ப்ப் பிசகு. போதும் என்ற மனசோடு சம்பானம் செய்து அதைக் கவனத்துடன் செலவழிக்க வேண்டும்.
சரீர சந்தோஷத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வது, எதை வேண்டுமானாலும் கேட்பது, எதை வேண்டுமானாலும் பேசுவது, எதை – வேண்டுமானாலும் தின்னுவது என்றில்லாமல், இவற்றையெல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது இந்திரிய நிகரஹகம் புலனடக்கம்.
அன்பு செலுத்தாமல் வாழ்ந்தால் அதில் ஆனந்தமே இல்லை. அன்பிலே உள்ள ஆனந்தம் வேறெதிலும் இல்லை என்று அனுபவத்தில் தெரிகிறது. அன்பினாலேயே பிறரை மாற்றுவதுதான் நமக்குப் பெருமை. அதுதான் நிலைத்து நிற்கும்.
நாம் ஆசைப்படுகிற வஸ்து கிடைக்காத பொழுது, இதற்குத் தடையாக இருந்தவர்களை மீது, அல்லது தடை என்று நாம் நினைத்தவர்கள் மீது கோபம் வருகிறது. அதாவது நிலைவேறாத காமமே, கோபம் என்று பெயர் கொள்கிறது. இது நமக்கு ஒரு பெரிய சத்ரு.
1. காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்க.
2. ”அன்றைய நாள் நல்ல நாள்களாக இருக்க வேண்டும்” என்று இறைவனிடம் வேண்டிக் கொள்க.
3. அடுத்த புண்ணிய ந்திகள், கோமாத, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர்கள் முதலியவற்றைக் குறைந்த பக்ஷம் ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும்.
4. வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோவிலுக்குச் சென்று கடவுளை வழிபட வேண்டும்.
5. உன் பக்கத்தில் வாழ்பவர்களையும, மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.
6. சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பக்ஷிகளுக்கோ ஆகாரம் அளித்துவிட்டு பிறகு சாப்பிடவும்.
7. அன்றாடம் குறைந்த பக்ஷம், சக்திகேற்றபடி தருமம் செய்க.
8. நெற்றியில் தவறாது திலகம் வைத்துக்கொள்க.
9. உறங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நீ செய்த நல்லவை, கெட்டவைகளை எண்ணிப்பார்க்கவும்.
10. ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு உறங்குக.