- அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது.- நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?
You see his heart is his alone
O heart, why not be all my own?
- O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?
- உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.- நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.
‘Tis plain, my heart, that he ‘s estranged from thee;
Why go to him as though he were not enemy?- O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying “he will not be displeased.”
- கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்.- நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?
‘The ruined have no friends, ‘they say; and so, my heart,
To follow him, at thy desire, from me thou dost depart.- O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?
- இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.- நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.
‘See, thou first show offended pride, and then submit,’ I bade;
Henceforth such council who will share with thee my heart?- O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?
- பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.- என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.
I fear I shall not gain, I fear to lose him when I gain;
And thus my heart endures unceasing pain.- My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.
- தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.- காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
My heart consumes me when I ponder lone,
And all my lover’s cruelty bemoan.
- My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.
- நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு.- அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்.
Fall’n ‘neath the sway of this ignoble foolish heart,
Which will not him forget, I have forgotten shame.
- I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.
- எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.- பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
If I contemn him, then disgrace awaits me evermore;
My soul that seeks to live his virtues numbers o’er.
- My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.
- துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.- துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?
And who will aid me in my hour of grief,
If my own heart comes not to my relief?
- Who would help me out of one’s distress, when one’s own soul refuses help to one?
- தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.- நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
A trifle is unfriendliness by aliens shown,
When our own heart itself is not our own!
- It is hardly possible for strangers to behave like relations, when one’s own soul acts like a stranger.