1. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
    கள்ளினும் காமம் இனிது.

      உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.

    From thought of her unfailing gladness springs,
    Sweeter than palm-rice wine the joy love brings.

      Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.
  2. எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
    நினைப்ப வருவதொன் றில்.

      விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.

    How great is love! Behold its sweetness past belief!
    Think on the lover, and the spirit knows no grief.

      Even to think of one’s beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.
  3. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
    சினைப்பது போன்று கெடும்.

      வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?

    A fit of sneezing threatened, but it passed away;
    He seemed to think of me, but do his fancies stray?

      I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.
  4. யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
    தோஒ உளரே அவர்.

      என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?

    Have I a place within his heart!
    From mine, alas! he never doth depart.

      He continues to abide in my soul, do I likewise abide in his ?
  5. தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
    எம்நெஞ்சத் தோவா வரல்.

      அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.

    Me from his heart he jealously excludes:
    Hath he no shame who ceaseless on my heart intrudes?

      He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.
  6. மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
    உற்றநாள் உள்ள உளேன்.

      நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?

    How live I yet? I live to ponder o’er
    The days of bliss with him that are no more.

      I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?
  7. மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
    உள்ளினும் உள்ளம் சுடும்.

      மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?

    If I remembered not what were I then? And yet,
    The fiery smart of what my spirit knows not to forget!

      I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?
  8. எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
    காதலர் செய்யும் சிறப்பு.

      எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?

    My frequent thought no wrath excites. It is not so?
    This honour doth my love on me bestow.

      He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ?
  9. விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
    அளியின்மை ஆற்ற நினைந்து.

      “நாம் ஒருவர் வேறு வேறு அல்லர்.” எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

    Dear life departs, when his ungracious deeds I ponder o’er,
    Who said erewhile, ‘We’re one for evermore’.

      My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.
  10. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
    படாஅதி வாழி மதி.

      நிலவே! நீ வாழ்க் இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.

    Set not; so may’st thou prosper, moon! that eyes may see
    My love who went away, but ever bides with me.

      May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.