- இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு.- எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.
Although there be no fault in him, the sweetness of his love
Hath power in me a fretful jealousy to move.- Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.
- ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.- காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்.
My ‘anger feigned’ gives but a little pain;
And when affection droops, it makes it bloom again.- His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.
- புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.- நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?
Is there a bliss in any world more utterly divine,
Than ‘coyness’ gives, when hearts as earth and water join?
- Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?
- புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.- இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது.
‘Within the anger feigned’ that close love’s tie doth bind,
A weapon lurks, which quite breaks down my mind.
- In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.
- தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.- தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.
To be estranged a while hath its own special charms. - Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.
- உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.- உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.
‘Tis sweeter to digest your food than ’tis to eat;
In love, than union’s self is anger feigned more sweet.- To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.
- ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.- ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்.
In lovers’ quarrels, ’tis the one that first gives way,
That in re-union’s joy is seen to win the day.- Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).
- ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.- நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?
And shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which ‘feigned anger’ lent its piquant grace.
- Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?
- ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.- ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக் அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.
Let her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign!
- May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!
- ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.- ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.
A ‘feigned aversion’ coy to pleasure gives a zest;
The pleasure’s crowned when breast is clasped to breast.
- Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.