• அடிமைபோல் உழைத்திடு; அரசனைப்போல் வாழ்ந்திடு.
  • எவன் ஒருவன் புகழை வெறுக்கிறானோ,அவனுக்கு உண்மையான புகழ் தானாகவே வந்தடையும்.
  • கேட்டால் ஒழிய யோசனை கூறாதே!
  • தலையைக் காட்டிலும் உன் நாக்கிற்கு விடுமுறை கொடு.
  • பெண்கள் இருக்குமிடத்தில் பேச்சு இருக்கும். வாத்துகள் இருக்குமிடத்தில் கொக்கரிப்பு இருக்கும்.
  • நாளை கிடைக்கும் கோழியைவிட இன்று கிடைக்கும் முட்டை மேலானது.
  • நமக்குப் பாரமாக இருப்பவர்களை மன்னித்து விடலாம். நாம் பிறருக்குப் பாராமாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
  • புலால் இருக்கும்போது பசி இல்லை. பசி வரும்போது புலால் இல்லை.
  • பொய்யன் வீடு தீப்பறி எரிந்தாலும் அச்செய்தியும் பொய்யாகிவிடும்.
  • முட்டாளுடன் விருந்துண்பதைவிட அறிவாளியுடன் கூலி சுமப்பது மேல்.
  • ரோஜாவையும் விரும்பு; அதன் முள்ளையும் நேசி.
  • மூடின பாலில் ஈ விழாது.
  • ‘மக்களாட்சி’ என்பது அரசை ஆள்பவர்களும் எதிர்ப்பவர்களும் இணைந்து இழுத்துச் செல்லும் வண்டியைப் போன்றது.