• அறிவும் ஒழுக்கமும் வண்டியின் இரு சக்கரங்கள்.
  • அன்பிருந்தால் பெரும் குறைகளையும் பொறுத்துக்கொள்ள முடியும். அன்பு குறைந்து போய்விட்டால் சிறிய குறைகள் கூட மாபெரும் குறைகளாகத் தெரியும்.
  • அந்நியனை நம்புகிறவன் அழிந்து போவான்.
  • அடக்கி வைத்திருப்பதைவிட திறந்துவிடுவது மேலானது.
  • அறிஞர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள். முட்டாள்கள் அதைப் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.
  • அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை. அது தன்னுடைய எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது.
  • ஆண்கள் வாய்ச் சண்டை போடும்போது எதிரியின் அயோக்கியத்தனங்கள் அம்பலமாகும். ஆனால், பெண்களோ எதிரிகளின் அவலட்சணத்தைத்தான் அம்பலப்படுத்துவார்கள்.
  • இறந்தவனைத் தவிர எவரும் நிம்மதியாய் இல்லை.
  • இருட்டிலும் தனிமையிலும் ஒழுக்கமாக இருக்கிறீர்களா? அதுதான் உண்மையான ஒழுக்கம்.
  • இளைஞர்களுக்கு பதினெட்டு வயதில் பேயும் பேரழகியாகத் தோன்றும்.
  • உச்சியிலிருந்து கீழே விழுந்தவனை ஒவ்வொருவனும் தள்ளிவிடுவான்.
  • உள்ளம் நிறைந்துவிட்டால் உதடு பேசும்.
  • உன்னை ஒருவன் ஒரு தடவை ஏமாற்றினால், அவனுக்கு அவமானம். இரண்டு தடவை ஏமாற்றினால், உனக்கு அவமானம்.
  • என்னுடையது, உன்னுடையது என்றில்லாவிட்டால் உலகம் சொர்க்கமாக இருக்கும்
  • ஏதாவது ஒரு மூலையில் பெண்ணொருத்தி இல்லாமல் ஒரு தீய கரியமும் நடந்ததில்லை.
  • ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு பழக்கம்.
  • ஒழுகும் கூரையும், பகையடையும் புகையடையும் கூண்டும், ஓயாமல் சண்டையிடும் மனைவியும் ஒருவனை வீட்டைவிட்டுக் கிளப்பிவிட முடியும்.
  • ஒரு பாவம் நூறு பாவங்களை இழுத்துக்கொள்ளும்.
  • ஒரு குற்றமுள்ள மனைவி வேண்டாமென்றால், இரு குற்றமுள்ளவள் வந்து சேருவாள்.
  • ஒரு கதவு மூடும்போது வேறொரு கதவு திறக்கிறது.
  • எதையும் தெரிந்து வீணாக்கும் பழக்கம் விரைவில் அதையே தேடி அலையச் செய்யும்.
  • கள்வனின் தாய் மகிழ்ச்சியாலும பயத்தாலும் இரண்டு தடவை நடுங்குகிறாள்.
  • எதற்கும் அளவுண்டு; தர்மத்திற்கு இல்லை.
  • இளமையில் பட்ட அடிகள் முதுமையில்தான் உணரப்படுகின்றன.
  • குழந்தை தன்னைத் தூக்கி வைத்திருப்பவரை அறியும்; தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துபவரை, அறியாது.
  • கல்யாணமானவன் சம்பாதிக்க ஆரம்பித்தால், அவன் இறந்த பிறகுதான் பணக்காரனாகிறான்.
  • சத்தியம், நிதானம், சகிப்புத் தன்மை ஆகிய மூன்றும்தான் அறிவை வளர்க்கின்றன.
  • திருமணத்திற்குப் பெண்ணைத் தேடும்போது கண்களை மூடிக் கொண்டே கடவுளைத் தியானம் செய்.
  • கன்னியின் கற்பு கண்ணாடிப் பாத்திரம் போன்றது. உடைந்தால் உதவாது.
  • துருப்பிடித்துத் தேய்வதைவிட உழைத்து தேய்வது மேலானது.
  • மனிதனுக்கு வலிமை அளிப்பன மூன்று. மரட்டுப் பயில் உறங்குதல், குளிர்ந்த காற்றைச் சுவாசித்தல், உலர்ந்த உணவை உணவை உண்ணுதல்.
  • வாழ்க்கையின் துன்பங்களுக்குப் புகழ் ஒரு எளிமயான பிரதிபலன்.
  • வக்கீல் வீட்டின் கூரைகள் வழக்காடிகளின் தோல்களால் வேயப்பட்டிருக்கின்றன.
  • முதுமைக்கு நூறு கோளாறுகள்.
  • செல்வத்தைவிட ஒரு தொழில் மேலானது.
  • வம்பு பேசுபவனின் வாய் சைத்தானின் தபால் பை.
  • முடிந்ததைச் செய்துவிட்டால் அதுவே எல்லாவற்றிலும் மேலானது.
  • மனிதன் பணத்தைக் கூட்டிக்கொண்டிருகிறான். கடவுளோ அவன் ஆயுளைக் கழித்துக்கொண்டிருக்கிறார்.
  • பணம் என்பது என்ன தெரியுமா? கொஞ்சம் கடனை வாங்கிப்பார். அப்போது தெரியும்.
  • மனிதர்கள் கொள்கைக் குருடர்கள்.
  • நாம் வைத்திருப்பதைக் கொண்டல்ல. அதை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் இறுதி நாளில் கணக்கிடப்படும்.
  • பணத்திற்காகத் திருமணம் செய்யாதே! அதை இன்னும் மலிவாகக் கடன் வாங்கலாம்.
  • குழந்தைகள் இளமையாக இருக்கும்போது பெற்றோர்களுக்குத் தலைவலி.
  • போக்கிரியைக் கட்ட வடம் வேண்டும். ஆனால், நாணயம் உள்ளவனைக் கட்ட நூலே போதும்.
  • மனிதன் ஆகாயத்திலிருந்து கொலைக் குண்டுகளை வீசுகிறான். கடவுள் அவனைக் குளிர்விக்க.
  • தகாத மனைவியுடன் ஏற்பட்ட வாழ்க்கையானது கண்ணில் பட்ட தூசி போலவும், செருப்பில் சிக்கிய கல்லைப் போலவும் இருக்கும்.
  • பணம் இல்லாத மணிப்பர்ஸ் வெறும் தோல்தான். வேண்டுமானால் நாயை விட்டுச் சோதித்துப்பார்.
  • புகழ், நீர்மட்டம்போல் பெரிதாகிப் பின்னர் மறைந்துவிடுகிறது.
  • விஷயம் இல்லாமல் ஒருவன் நீண்ட நேரம் பேசலாம்.
  • மூன்று செயல்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியது; அவை சென்றதை மறபதுந நிகழ்காலத்தை நேர் வழியில் செலுத்துவது வருங்காலத்தைப்பற்றிச் சிந்திப்பது.
  • எல்லா மனிதர்களும் உலகத்திற்கு வர ஒரே மாதிரி நுழைவு வாயிலைப் பெற்றுள்ளனர். ஆனால், வெளியேற அவ்வாறில்லை.
  • நெருக்கடியில் துன்பப்படாதவன் ஒருபோதும் புத்தராக முடியாது.
  • நல்ல விமர்சகர் மோசமாகச் செயல்படுபவர்.
  • மற்றவர்கள் விழுந்ததைப் பற்றிச் சிந்திக்காதே! முன்னால் உள்ள பாதை வழுக்கலானது.
  • என்னதான் கீழே விழுந்தாலும் நல்ல மனிதர்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.
  • கல் மிதக்கும்போது இதழ்கள் அமிழ்ந்து விடுகின்றன.
  • கண்கள் தங்களையே நம்புகின்றன. காதுகள் மற்றவர்களை நம்புகின்றன.
  • அதிர்ஷ்டத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பது மரணத்திகாகக் காத்துக்கொண்டிருப்பதுதான்.
  • தன்னுடைய அறியாமையை ஒத்துக்கொள்கிறவன் அதை ஒருமுறை காட்டுகிறான். தன்னுடைய அறியாமையை மறைக்கின்றவன் அதை பலமுறை காட்டுகிறான்.