- அச்சம் இதயத்தின் சிறை.
- அடுப்படியில் அடைகாக்கும் கணவன் அடிவயிற்றில் வலி.
- அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத யுத்தம் நடந்துகொண்டே இருக்கிறது.
- ஆரோக்கியத்திற்கு அடிப்படை நோயை அடையாளம் காணுதல்.
- ஆண்டவன் எல்லா இடத்திலும் இருக்க முடியவில்லை. அதனால்தான் அன்னையைப் படைத்தான்.
- இதயம் நல்லதாக இருந்தால் துரதிரஷ்டங்களையும் தகர்த்துவிடலாம்.
- இத்தாலியில் பிறந்து, குழந்தை பாதி அநாதை. தாயில்லாக் குழந்தை மீதி அநாதை.
- தந்தை இல்லாக் குழந்தை பாதி அநாதை. தாயில்லாக் குழந்தை மீதி அநாதை.
- கோடி கலைகளும் வயிற்று உணவுக்காகத்தான்.
- ஒரு வீட்டை வாங்குவதற்கு முன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
- எந்த விரலை கடித்தாலும் வலி ஒன்றுதான்.
- பொய்கள் அமர்வதற்கு சிம்மாசனம் அமைத்துக் கொடுக்காதீர்கள். அப்படி அமைத்தால் நீங்கள் உண்மைக்குத் தூக்கு மேடை அமைத்தவர்களாவீர்கள்.
- விளைச்சல் நன்றாக இருந்தால் தானியங்களை உடனே விற்று விடுங்கள். விளைச்சல் குறைவாக இருந்தால் தாமதித்து விற்க வேண்டும்.
- எட்டு மனிதர்கள் உள்ள கிராமத்திலும் ஒருதேச இருப்பான்.
- உங்களையே கிள்ளிப்பாருங்கள். மற்றவர்களுக்கு இதனால் ஏற்படும் துன்பம் எப்படி இருக்குமென்று புரியும்.
- மேற்கே பார்த்துக்கொண்டிருந்தால் சூரிய உதயத்தை காணவே முடியாது.
- பத்து மனிதர்கள் 11 வித நிறம் கொண்டவர்கள்.
- ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால் கடலையும் வற்ற வைக்க முடியும்.
- இன்று செய்த நன்மை நாளைய இன்பம்
- இழந்த பொருள் இறைவனுக்கு அர்ப்பணம்.
- அகம்பாவம் ஒரு முரட்டுக் குதிரை போன்றது. ஒரு முறையாவது சொந்தக்காரனையே வீழ்த்தும்.
- அயோக்கியன் கூட மேடை ஏறிவிட்டால் நல்லதையே பேசுவான்.
- ஆத்திரம் செயல் வேகத்தை மட்டுப்படுத்தும்.
- இளமையில் பட்ட அடிகள் முதுமையில் உணரப்படுகின்றன.
- அதிர்ஷ்டம் உள்ளவனுகு நண்பன் கிடைப்பான். துரதிர்ஷ்டம் பிடித்தவனுக்குப் பெண் கிடைப்பாள்.
- அன்புள்ள பெற்றோர்கள் உண்டு. அன்புள்ள பிள்ளைகள்தான் இல்லை.
- அற்பத் தொல்லைகளுக்கு அஞ்சுபவன் அரிய சாதனை செய்யமாட்டான்.
- அதிகமாக யாரும் எதையும் கொடுத்தால் ஏற்காதே!
- அருகில் இருப்பவர்களுக்கு உதவி செய்தால் தூரத்தில் இருப்பவர்களும் தேடி வருவார்கள்.
- அறிவு என்னும் கதிர் அறுக்க கண்ணீர் மழை பொழிய வேண்டும்.
- அறிந்தவர்கள் அதிகம் பேசுவதில்லை, அதிகம் பேசுபவர்கள் அறிந்தவர்கள் இல்லை.
- ஆகாயத்திலிருந்து ஈச்சம் பழம் விழுந்தால் நீயும் வாயைத்திறக்கத்தான் வேண்டும்.
- அறிவிலி கூறும் பொன்மொழி, வாயில் உருளும் கூழாங்கல்.
- அன்பு இருந்தால் யானையைக்கூட ஒரு மயிரில் கட்டி இழுக்கலாம்.
- அறிவுப் பெருக்கத்திற்குச் சரியான சாவி ‘ஐயம்’
- அந்நியர்களுடன் நந்தவனத்தில் உலவுவதைவிட நண்பர்களுடன் விலங்கிட்டிருப்பதே மேல்.
- ஆட்டு மந்தை கிளப்பும் தூசி ஓநாய்க்கு இன்பமான காட்சி.
- இந்த உலகில் மூன்று நண்பர்கள் உண்டு. புத்தி, தைரியம், பகுத்தறிவு.
- ஆணின் சொற்கள் அம்பு, பெண்ணின் சொற்கள் ஒடிந்த விசிறி.
- இன்பமாக வாழ வேண்டுமா? செவிடாக,குருடாக, ஊமையாக இருந்துவிடு.
- இழந்துவிட்ட சட்டைப் பையில் இருந்ததெல்லாம் தங்கம்தானாம்.
- அறிவாளி பயன்படுத்தும் மேற்கோள் விரலில் பளிச்சிடும் மோதிரம்.
- அறிவில் போடும் முதலீடு அதிக இலாபம் தரும்.
- அம்பு வேகமுள்ளது. பழி வாங்கல் படுவேகம் உள்ளது செய்த தவறுக்கு வருந்துதல் அதைவிட வேகமானது.