- அவசர வேலை இரட்டிப்பு வேலை.
- ஆண்களைவிட பெண்களுக்குப் பசி இரட்டிப்பு, புத்தி நான்கு மடங்கு, ஆசைகள் எட்டு மடங்கு.
- இன்சொல் இரும்புக் கதவைத் திறக்கிறது.
- உலகில் மூன்று பொருட்கள் மிகவும் மதிப்புள்ளவைகளாக கணக்கிடப்படுகின்றன. அறிவு, தானியம், நட்பு.
- எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே ஆண்டவன் இருக்கிறான்.
- ஒருவனின் உள்ளச் சிந்தனைகள்தான் ஒரு மனிதனுடைய செல்வம்.
- என்னைத் துன்புறுத்துகிறவன் எனக்கு பலத்தைப் போதிக்கிறான்.
- ஓநாயைப் பார்த்தவன் ஒரு தனவை கூச்சலிடுவான். அதைப் பார்க்காதவன் இரண்டு தடவை கூச்சலிடுவான்.
- கடவுஇடம் கேட்டால் கிடைக்காதது ஒன்றுமில்லை.
- சக்தி அதிகமாக இருப்பினும் ஓட்டம் நிதானமாக இருப்பது நல்லது.
- சிரியுங்கள், உங்களுடன் சிரிக்க நிறையப்பேர் வருவார்கள். அழுங்கள், எவரும் உங்களுடன் வரமாட்டார்கள்.
- பசி தீர்ந்தவன் பசிக்கிறவனை நம்புவதில்லை.
- பழத்தைச் சாப்பிட பூவைப் பாதுகாத்தல் வேண்டும்.
- பணத்தில் ஒரு பகுதியை மகிழ்ச்சியாக செலவழிக்க வேண்டும். இரண்டு பகுதிகளை தொழில்களில் ஈடுபடுத்த வேண்டும். நான்காவது பகுதியைச் சேமித்து வைக்க வேண்டும். அது அவசரத்திற்கு உதவும்.
- பாலைக் கறப்பதற்கு முன் அவர்களைப் பசுவை தடவிக்கொடுக்கிறார்கள்.
- பொறுமை வாழ்வின் காய கல்பம். கள்வனுடைய தோழன் கள்வன்.
- மனம் கடல் போன்றது. பகுத்தறிவு கூரிய கத்தி போன்றது.
- மெதுவாகச் சாப்பிட்டால் வயிற்றுவலி வராது.
- மேகங்களைப்போல் நல்லவர்கள் கொடுப்பதற்காகவே பெறுகிறார்கள்.
- முயற்சி இல்லாத நம்பிக்கை, கப்பல் இல்லாக் கடல் யாத்திரை போன்றது.
- நீ நூறு வருடம் வாழ்பவனைப் போல் வேலை செய். நாளையே இறந்து விடுபவனைப்போல் சிந்தனை செய்.
- நரகத்திலிருந்து வந்தவன் கடும் சாம்பலுக்கு அஞ்சமட்டான்.
- நாக்கும் பற்களும் இடையிடையே சண்டையிடுகின்றன.
- நாளை விடிந்தால் நடக்கும் கதை யாருக்கும் தெரியாது.
- விசாரித்தறிவது நஷ்டமும் அல்ல. கேவலமும் அல்ல. அதிகம் கொக்கரிக்கும் கோழி சின்ன முட்டைகளை இடும்.
- வருகை புரியாதவன் நல்லவன்.
- புண்ணியம் இல்லாமல் வீரன் இல்லை.
- இதயம் பேச விரும்பாவிட்டால் கண்கள் பேசும்.
- நீண்ட காலம் வாழ விரும்பினால் இதயத்தைத் திற.
- நம்முடைய இளமையில் பல விஷயங்கள் தவறாக இருப்பதாக நம்புகிறோம். முதுமையின் பல விஷயங்கள் உண்மையாக இருக்கிறதா என சந்தேகப்படுகிறோம்.
- இளமையில் திருமணம் செய்துகொள். நீ இன்னும் இளமையாக இருக்கும்போதே பெரிய குழந்தைகளை அடையலாம்.
- இளமை தெரிந்திருந்தால் முதுமை செய்ய முடிந்தால் அற்புதம் நிகழும்.
- கலப்பையும் மண்வெட்டியும் உலகிறகு உணவு ஊட்டுகின்றன.
- உணவுக்குகந்த பறைவைகள் நீண்ட காலம் வாழ்வதில்லை.
- தலைகள் உள்ள காலம் வரையில் தொப்பிகள் இருக்கும்.
- பல நல்ல வாய்ப்புகள் கதவின் மேல் கட்டப்படாததால் நழுவிவிடுகின்றன.