- அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்துகொண்டே இருக்கும்.
- ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர். பெண்கள் குணத்தை ஒரு அழகாகப் பார்க்கின்றனர்.
- ஆயிரம் முறை தலை குனிந்து பிரார்த்தனை செய்வதைவிட மனிதன் ஒருவனுக்கு மகிழ்ச்சியைத் தரும் வேலையைச் செய்வது சாலச் சிறந்தது.
- உன்னை யார் நேசிக்கிறார்களோ, அது ஒரு நாயாக இருந்தாலும் கூட நீ அவர்களை நேசிப்பாயாக!
- உலகிற்கு வெட்கப்படாதவன் கடவுளுக்குப் பயப்படமாட்டான்.
- அயலான் வீட்டை நீ உலுக்கினால் உன் வீடு சீக்கிரம் உன் தலையில் விழும்.
- ஒரு சிறிய பழமொழியிலிருந்து நல்லதொரு, பாடத்தை மிக மலிவான இலையில் நீ காதால் வாங்கிக்கொண்டிரு.
- ஒவ்வொரு மனிதனும் மக்கள்.
- ஏழ்மையின் காரணமாக உன்னைத் தாழ்த்தாதே! செல்வத்தின் காரணமாக உன்னை உயர்த்தாதே!
- ஒரு வேலை உணவை இழத்தல் – நூறு வைத்தியர்களை அழைப்பதைவிட மேலானது.
- ஒருவன் ஒரு முறை கீழே விழுந்தால் எல்லோரும் அவனை மிதித்துவிடுவார்கள்.
- ஓர் ஆடு வேலியைத் தாண்டினால் மற்றவையும் அதனையே தொடரும்.
- தனது நடத்தை அளவுக்கு ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கிறான்.
- திருமணம் மூடிய தட்டிலிட்ட உணவு.
- மனைவியின் முகத்தைப் பார்த்தாலே கணவனின் பண்பு புரியும்.
- புத்தகமும், நண்பர்களும் குறைவாகவும், நல்லதாகவும் இருக்க வேண்டும்.
- நன்மை செய்தாலும் சரி, தீமை செய்தாலும் சரி, ஒருவன் அதனைத் தனக்கே செய்கிறான்.