- அவசரம் பிசாசின் குணம்.
- இருவர் கூடியிருப்பது என்பது கிடையாது. இறைவனையும் சேர்த்து மூன்று பேர்.
- உருவம் சிறியதென்று எண்ணாதே! ஊசி உருக்கினால் செய்யப்பட்டது.
- உன் மனைவி குள்ளமாக இருந்தால் நீ குனிய வேண்டும்.
- ஒவ்வொருவரும் தன் வீட்டு வாசலைச் சுத்தம் செய்தால் தெரு தானாகவே சுத்தம் ஆகிவிடும்.
- உலகம் ஒரு நாட்டியக்காரி மாதிரி. ஒவ்வொருவருக்காகவும் அது கொஞ்ச நேரம் ஆடுகிறது.
- ஒரு நல்ல காரியத்திலிருந்து மற்றொரு நன்மை உண்டாகிறது. பாலிலிருந்து வெண்ணெய் வருகிறது.
- தாயிலே கெட்டவருமில்லை. சாவிலே நல்லதும் இல்லை.
- கடன் வாங்குதல் ஏழைக்கப் பிறக்கும் முதல் குழந்தை.
- நல்ல மாற்றாந்தாய்கு சொர்க்கத்தில் தங்க நாற்காலி காத்திருக்கிறது.
- தாயை அழவிடுவதில் மனிதர்கள் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால், ஆண்டவன் அவர்களுடைய கண்ணீரை எண்ணிப் பார்க்கிறான்.
- களங்கமற்ற மனம் மிகச் சிறந்த அறிவாற்றலைவிட மேலானது.
- நிலவு உன்னோடு இருந்தால் நட்சத்திரங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.