- புலியின் குகைக்குள் உன்னால் நுழைய முடியாதென்றால் புலிக்குட்டிகள் உன்னிடம் சிக்காது.
- மாற்றாருக்காக முள்வேலி அமைப்பவன் அதிலேயே மடிகின்றான்.
காஷ்மீர்
- அழகானவை கஷ்டமானவை
- அதிக ஓய்வு அதிக வேதனை.
- அமைதி என்னும் அறுவடை, நிறைவு என்னும் விதையிலிருந்து உருவாகிறது.
- கஞ்சன் முட்டையை விழுங்கிவிட்டு ஓட்டை தானம் செய்வான்.
- நன்றாகத் தொடங்கிய வேலை பாதி முடிந்ததற்குச் சமம்.
- மெதுவாக சிந்தனை செய். விரைவாகச் செயல்படு.
- தீயைத் தீயால் அணைப்பதில்லை.
- உன்னதமான ஆன்மாவுக்கு உலகனைத்தும் தாயம்.
உருது
- முயற்சியே பெரும் பாக்கியம்
- செவிட்டுக் கணவனும், குருட்டு மனைவியும்தான் எப்போதும் ஒழுங்காக வாழ முடியும்.
- நெருப்பு எவ்வாறு பொன்னைப் பிரகாசிக்கச் செய்கிறதோ அதுபோன்று மனோசக்தி மனிதனைப் பிரகாசிக்கச் செய்யும்.
இந்தி
- ‘கோடையில் எல்லாம் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்’ என்று குளிர்காலம் கேட்கும்.
- இதயம் அங்கு இல்லாவிட்டால் குறைந்த பட்சம் கால்களாவது அங்கு இருக்கட்டும்.
பஞ்சாப்
- உயிருக்கு ஆதாரமாக உண்பவரும், சந்ததியின் பொருட்டு திருமணம்செய்து கொள்பவரும், உண்மை பேசுபவரும் துன்பத்தினை வெல்லக்கூடியவர்கள்.