• ஓர் ஆண்டின் களையெடுப்பு ஏழாண்டுகளின் விதை.
  • அவர்கள் அவனைப் பிடிக்கும் நாள் வரை ஒவ்வொருவரும் நேர்மையானவரே!
  • ஒரு ஆணியின் மேலேயே உன் துணிகள் எல்லாவற்றையும் தொங்கவிடாதே!
  • மனித இனத்தைத் தவிர இயற்கையின் எல்லா இனங்களிலும் பெண் இனத்தைவிட ஆண் இனம் அழகாக இருக்கிறது.
  • நம் இதயம்தான் நம்மைச் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அழைத்துச் செல்கிறது.
  • அழகான பெண் அழகான தொல்லை.
  • ஆற்றின் கீழே இருக்கும் பாறாங்கல்லுக்கு பாதைமேல் இருக்கும் பாறாங்கல்லின் வருத்தம் தெரியாது.
  • திருப்தியான பறவையும் பசி மிகுந்த பறவையும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்க முடியாது.
  • நிலம் சூடாக இருக்கும்போது புழு மண்ணிலேயே இருந்து விடுகிறது.
  • மிக மிக வேகமாக ஓடு. நீ இருமுறை ஓடுவாய்.