- நாம் எப்போது ஆரம்பிப்பது என்று நினைக்கும்போது, அதுவே மிகுந்த தாமதமாகிறது.
- அவர்களுடைய இழப்பிற்காக நான் துக்கப்படுகிறேன்.. ஆனால் மிக அதிகமாக நான் காலம் இழந்ததற்கே துக்கப்படுகிறேன். எவரும் தங்கள் பணப்பையைக் காத்துக்கொள்ள முடியும் ஆனால், இழந்துபோன காலத்தை ஒருவரும் மீண்டும் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது.
- மூன்று நாளைக்குப் பின் ஒரு பெண், ஒரு விருந்தினர், மழை மூவரும் களைப்படையச் செய்கின்றனர்.
- கண்ணீரால் கடினமான வைரத்தையும் உருக்கலாம்.
- எங்கே சுதந்திரம் வீழ்கிறதோ அங்கே ஒருவரும் தைரியமாகப் பேச மாட்டார்கள்.
- மரியாதைகளும் ஒரு சுமையே.
- சிங்கப் படையை ஒரு கலைமான் ஏற்று நடத்துவதைவிட கலைமான்களின் படையை சிங்கம் தலைமையேற்று நடத்திச் செல்வது மிகப் பயங்கரமானதாக இருக்கும்.
- இன்று எனக்கு; நாளை உனக்கு.
- இரவும் தனிமையும் முழுக்க சாத்தான்களுடையன.
- நமக்கு மேலே உள்ள விஷயங்களும், நமக்குக் கீழேயுள்ள விடியல்களும் நமக்கு ஒன்றும் இல்லை.
- அதிகமாகத் தெரிந்துகொண்டிருப்பதைவிட குறைவாகத் தெரிந்துகொண்டிருப்பவர் இழப்பது மிகவும் சிறிதளவே.
- நிதானமாக ஆத்திரப்படு.
- பூமாலையில் உராய்ந்தால் பூ ஆதாரம்.
- ஆபத்து இல்லாமல் ஆபத்தை கடக்க முடியாது.
- செங்குத்தான மலைகள் முன்னாலே, ஓநாய்கள் பின்னாலே.
- ஆலாபனை இனிய பண்ணிசைப் பாடலின் நாற்றங்கால்.
- அறிவாளிகளால் உணர்வுகள் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படுகின்றன. ஆனால், முட்டாள்களால் பரிமாறப்படுகின்றன.
- வீரம் குறைந்த நெஞ்சம் ஒருபோதும் அழகிய மங்கையைச் சொந்தமாக்கிக் கொள்ளாது.
- அழகிய முகமும் நல்ல அதிர்ஷ்டமும் ஒரே வழியில் பயணம் போகாது.
- அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது.
- மனிதன் இடத்தை அழகுபடுத்துகிறான். இடமல்ல மனிதனை அழகுபடுத்துவது.
- உன்னுடைய அரிவாள் தீட்டப்பட்டால் உன் வேலை தாமதமாகாது.
- அதிர்ஷ்டம் நிலையில்லா மனத்தினள். அவளால் கொடுக்கப்பட்டதை திரும்பவும் வேகமாக்க் கேட்கிறாள்.
- உண்மை வெறுப்பை வளர்க்கிறது. செல்வச் செழிப்பு செருக்கை வளர்க்கிறது. பாதுகாப்பு அபாயத்தை வளர்க்கிறது.
- ஒரு மனிதனை மிகவும் அதிகமாக அதிர்ஷ்டம் சீராட்டும்போது அது அவனை முட்டாளாக்குகிறது.
- அதிர்ஷ்டம் ஒரு கண்ணாடி. அது ஒளிவீசும் தருணத்தில் உடைந்துபோகிறது.
- யார் மற்றவர்களை அச்சுறுத்துகிறாரோ, அவரே மிகவும் அச்சத்திலிருக்கிறார்.
- பயன்படுத்து, பழுது படுத்தாதே.
- சமாதானத்தின் சிங்கமாக இருப்பவர்கள் அடிக்கடி போரில் மான்.
- பூனைகள் மிகவும் நேசிக்கின்றன. ஆனால், கால்களை நனைக்க விரும்பவில்லை.
- வியர்வை இல்லாமல் இனிமை இல்லை.
- நாக்கை மடக்கிக் கொள்கிற முட்டாளும் அறிவாளிதான்.
- நீரூற்றுகள் கூடத் தாகமாக இருப்பதாக முறையிட்டுக் கொள்கின்றன.
- ஆசைப்படுவது முடியாது.