- அதிர்ஷ்டம் என்பவள் பலவீனமான கைகளையே பெற்றிருக்கிறாள். எவரை அவள் மேலே உயர்த்துகிறாளோ அவரை விரைவில் கீழே போட்டுவிடுகிறாள்.
- அயலானை நேசி. அதற்காக அவளையும் உன்னையும் பிரித்து வைக்கும் வேலியைப் பிரித்து வீசாதே!
- அன்பும் மனைவியும் இருப்பதுதான் வாழ்க்கை.
- அயோக்கியனைக் கேட்காதே! அவன் தன் கருத்தையே சொல்வான்.
- அநேக வேளைகளில் கவலை ஒரு சிறிய காரியத்திற்குப் பெரிய நிழலைத் தருகிறது.
- அன்னையின் அன்பிற்கு வயதே கிடையாது.
- இளம் மனைவி தன் நிழலாகவும் எதிரொலியாகவுமே இருக்க வேண்டும்.
- உங்களுடைய கவலைகளை உங்களுடைய முழங்காலுக்கு மேலே போக விடாதீர்கள்.
- உணவிற்குப் பின் ஓய்வு கொள். உன் பெற்றோர்கள் இறந்திருந்தாலும் கூட.
- எப்போதும் உங்களைச் சோம்பல் ஏமாற்றமால் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இன்று ஒரு நாளை அதற்கு விட்டுக் கொடுத்தால் அடுத்த நாளை அதுதானே திருடிக்கொள்ளும்.
- ஏழ்மையிலிருந்து செழுமைக்குப் போகும் பயணம் கடினம். திரும்பி வருவது எளிது.
- எளிமையே உயர்ந்த இன்ப வாழ்க்கை.
- ஒவ்வொருவன் நெஞ்சிலும் ஒரு தேவாலயம் இருக்கிறது.
- உன்னடைய நோக்கம் தூய்மையான தென்றால் கடலின் மேலும் நடக்கலாம்.
- ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள். பெண்ணோடு பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி.
- ஒரு புலி இறக்கும்போது தனது தோலை விட்டுச் செல்கிறது. ஒரு மனிதன் தான் இறக்கும்போது தனது நற்பெயரை விட்டுச் செல்கிறான்.
- ஒரு பெண்ணுடைய உபதேசம் கேவலமானதுதான். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாதவன் முட்டாளாகின்றான்.
- ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் கற்றுக்கொள்வாய்.
- கடவுள் பல இல்லாதவனுக்குப் பாதாம் கொட்டை வழங்குகறான்.
- பயத்தைக்குறை – துணிவைப் பெருக்கு
- உணவைக் குறை – உழைப்பைப் பெருக்கு
- குடியைக் குறை – மூச்சைப் பெருக்கு
- பேச்சைக் குறை – அன்பைப் பெருக்கு
- எல்லா நன்மைகளும் உன்னுடையதாகும்.
- கடன் வாங்குவது பிச்சை எடுப்பதின் அடுத்தபடி.
- கருணையை எதிர்க்கும் வலிமையுள்ள வாளாயுதம் எதுவுமே இல்லை.
- காரிகை, காற்று, காசு இவை மூன்றும் மாறிக்கொண்டே இருப்பவை.
- காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்கின்றவன் துன்பத்தில் வாழ்ந்துதான் ஆக வேண்டும்.
- குற்றத்தை ஒப்புக்கொள்வது நேர்மையின் முல்படி.
- தாயின் நற்குணம் கடவலைவிட ஆழமானது.
- த்தைஇன் நற்குணம் மலையைவிட உயரமானது.
- தீய மனைவி அறுபது வருடமாய்த் தீய்ந்துபோகும் பயிருக்குச் சம்மானவள்.
- பட்டாடை அணிந்து ரகம் செல்வதைவிட, கந்தை அணிந்து சொர்க்கம் செல்வது மேலானது.
- பச்சாதப்ப்படாதவனை மன்னிப்பது எனபது நீரின் மேல் சித்திரம் வரைவதைப் போலாகும்.
- படுக்கப்போகும் முன் கவலைகளைச் செருப்போடு கழற்றி வைக்க வேண்டும்.
- பறவைக்குப் பயந்து விதைக்காமல் இருக்காதே!
- பெரிய பணக்கார்ர்கள் மூன்று தலைமுறைக்கு மேல் பெரிய பணக்கார்ர்களாக இருக்க முடியாது.
- மனித இனம் பெருந்தன்மையானதுதான். ஆனால், மனிதர்கள் சிறுமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
- மனைவியரும், படுக்கும் பாய்களும் வந்த புதிதில் சிறப்பாய் இருப்பவை.
- மூளையின் அறியாமையால் உடல் களைப்படைகிறது.
- மாமியாருக்கு மரியாதை காட்டினால் தினமும் மூன்று முறை வந்து சலிப்படையச் செய்வாள்.
- மூன்று பொருட்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றன – நீர், பூக்கள், அழகிய முகம்.
- மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கே கோபம் வரும்.
- விகாரமான பெண் கண்ணாடியைக் கண்டு அஞ்சுவாள்.
- வெற்றி பெற்றவர்கள் அரசர்கள். தோல்வியுற்றவர்கள் திருடர்கள்.
- ஒருமுறை மகள் வாயில் நுழைகிறவன் மிக அரிதாகவே அவைகளிலிருந்து வெளியே வருகிறான்.
- ஒவ்வொரு மணிநேரமும் காயப்படுத்துகிறது. கடைசி மணிநேரம் கொன்றுவிடுகிறது.
- அரசர்களின் நாய்க்கும் பேன் பிடிப்பதுண்டு.
- புரிந்துகொள்வதற்கு கடினமானதை உங்கள் முன்னால் வையுங்கள். புரிந்துகொள்வதற்கு இலகுவானதை உங்கள் பின்னால் வையுங்கள்.
- பூமியில் ஒரு குடிசையைக் கட்டச் சாமர்த்தியம் இல்லாத பலர் காற்றில் கோட்டைகளைக் கட்டுகின்றனர்.
- திறந்த பெட்டி, துறவிகளையும் ஊழல் புரியச் செய்கிறது.
- மேன்மக்கள் பாவம் புரியம்போது ஏழை மக்கள், பாவபரிகாரம் செய்கிறார்கள்.
- பன்னிரண்டாவது வயதில் பிள்ளைப் பிராயமும், பதினெட்டாது வயதில் இளமையும், இருபத்தியோராவது வயதில் காதலும் முப்பதாவது வயதில் மனிதர்களின் விசுவாசமும், நாற்பதாவது வயதில் நம்பிக்கைகளும், ஐம்பதாவது வயதில் ஆசைகளும் அறுபதுக்குமேல் சிறுகச் சிறுக ஐம்புலன்களும் புதைக்க படுகின்றன.
- கைக்கும் வாய்க்கும் இடையே நிறைய இழப்பு இருக்கிறது.
- விடுமுறை நாட்கள் அரசைர்போல வருகிறது. பிச்சைக்காரர் போலப் போகிறது.
- ஒரு விதவை தாழ்ந்த தாழ்ந்த வேலி. அதன்மேல் ஒவ்வொருவரும் தாண்டுகிறார்கள்.
- இரண்டு பெண்கள் உள்ள அங்கே வீடே இல்லை.
- எப்போதுமே வாழப்போகிறோம் என்று ஒருவர் வீடுகட்ட வேண்டும். நாளையே சாகப்போகிறோம் என்று வாழ வேண்டும்.
- வெய்யிலில் இருப்பது ஒன்று பழுக்கிறது அல்லது உதிர்கிறது.
- நேர்மை எப்போதும் வெற்றி பெறுவதில்லை. ஆனால், வெற்றி எப்போதும் நேர்மையில் இருக்கிறது.
- முகஸ்துதி இனிய நஞ்சு
- பிர்ர்த்தனை செய், எந்த வேலையும் துணை புரியாது என்பதைப்போல, வேலை செய், எந்தப் பிரார்த்தனையும் துணை புரியாது என்பதைப்போல.