- அரசனைவிட பெண் அதிகத் தந்திரம் உள்ளவள்.
- இன்று செயல்படுங்கள். இன்று சேமியுங்கள். இன்று நல்லது செய்யுங்கள். நாளை நன்கு ஓய்வு எடுக்கலாம்.
- உலகம் ஒரு காய்ந்த மரம். சாகும் மனிதனே அதில் சாய்ந்து நிற்காதே!
- உடம்பே, நீ தேய்ந்து போ! உள்ளமே, நீ உறுதியாக இரு.
- உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி இந்த மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். அந்த மூன்றுமே இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.
- உன்னைப் புண்படுத்துவது எது என்பது உனக்குத் தெரிந்தால் மற்றவர்களைப் புன்படுத்துவது எது என்பது உனக்குத் தெரியும்.
- ஒரு யானையின் உதையை இன்னொரு யானைதான் தாங்க முடியும்.
- ஒரு பொய் ஈட்டியைவிட அதிகமான துன்பத்தைக் கொடுக்க முடியும்.
- எத்தனையோ, அநீதிகள் பழக்கத்தால் நீதிகளாகத் தோன்றுகின்றன.
- ஓநாய்க்குக் கருணை காட்டுவது ஆட்டுக் குட்டிக்குக் கொடுமை செய்வதாகும்.
- கரி சாம்பலைப் பார்த்து சிரிக்கிறது.
- கஞ்சனுடைய பணப் பெட்டியைத் திறக்கும் சாவி, சாவின் கையில் இருக்கிறது.
- இதயம் ஒரு வெள்ளாடு போன்றது. அனைக் கட்டிப்போட வேண்டும்.
- இதயம் ஒரு சிறு குழந்தை.
- ஏழ்மைப்பார்த்து சிரிப்பவன் அதனைத் தன் பக்கம் இழுக்கிறான்.
- ஓர் அழகான பெண் மகிழ்ச்சியடைந்தால் பணப்பை கண்ணீர் விடும்.
- ஒரு சங்கிலியின் வலிமை அச்சங்கிலியிலுள்ள வலிமை குறைந்த வளையத்தைப் பொறுத்தது. ஒரு குழுவின் வலிமை அதிலுள்ள வலிமையற்றவனைப் பொறுத்திருக்கிறது.
- காதல் நோய்க்கு மருத்தவன் இல்லை.
- நாக்குதான் மனிதனைக் கொல்கிறது. நாக்குதான் மனிதனைக் காப்பாற்றுகிறது.
- திறமையான நீச்சல்காரனைத்தான் ஆறு அடித்துக்கொண்டு செல்கிறது.
- பணக்காரன், குழந்தை வேண்டுமென்று கேட்டால் பணம் வருகிறது. ஏழை பணம் வேண்டும் என்று கேட்டால் குழைந்தைக் கிடைக்கின்றன.
- மனித குலம் நம்மை வெறுத்தால் தாங்கிக்கொள்ளலாம். ஆனால், குழந்தைகள் நம்மை வெறுத்தால் தாங்கிக்கொள்ள முடியாது.
- பொருள் வாங்குபவனுக்கு ஆயிரம் கண்கள் தேவை விற்பவனுக்கோ ஒரு கண் போதும்.
- நல்ல புத்தகத்தைக் காட்டிலும் நம்பிக்கையுள்ள மனிதன் உலகில் எதுவுமில்லை.
- வழக்கம் என்பது முதலில் ஓட்டை. பிறகு இரும்புச் சங்கிலி.
- செயலழகைத் தவிர வேறு அழகில்லை.
- போட்டியிடு! பொறாமைப்படாதே!
- பொறுமையால் அதிகம் சாதிக்க முடியும்.
- குழந்தைகளுக்கு செவிகள் அகலமானவை. நாக்குகள் நீளமானவை.
- மனிதனுக்கு மேலே இருக்கும் சிற்றரசன் அவனது மன சாட்சி.
- தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை.
- தாய்க்காக மனைவியை வெறுப்பவன் பழைய மிருகம். மனைவிக்காக தாயை வெறுப்பவன் புதிய மிருகம்.
- பணிவான சொல், செல்லும் பாதையை எளிமை ஆக்குகிறது.
- உலகம் ஒரு பயணிகள் விடுதி.
- நீயும் நானும் ஒத்துப் போய்விட்டால் வழக்கறிஞர் எதற்கு?
- கத்தி சானைக்கல்லைத் தின்கிறது. சாணைக்கல் கத்தியைத் தின்கிறது?
- அடுத்தவன் தாடியில் தீ பிடித்தால் உன் தாடியை நீரில் நனைத்துக்கொள்.
- பழக்கம் ஒரு முழு வளர்ச்சியடைந்த மலை. அதைத் தாண்டுவதும் கடினம். தகர்ப்பதும் கடினம்.
- தேவையும் துன்பமும் ஒருபோதும் நம்மைவிட்டுப் பிரியாது.
- பணத்தைத் தவிர மற்ற யாவும் உன்னைத் திருப்திப்படுத்தும்.
- எவ்வளவு பணம் வைத்திருக்கிறோமோ அவ்வளவு பணம் மேலும் உனக்குத் தேவைப்படும்.
- குழந்தைகள் தெய்வங்களோடு பேசுகின்றன.
- வீரனின் வியர்வை இரத்தம்.
- பணம் பனி போன்றது.
- தான் தின்னி திருடன்.
- பொய்கள் ஈக்களைப்போல் இரைகின்றன. ஆனால், சத்தியத்தில் சூரியப் பிரகாசம் உண்டு.
- உதட்டினால் மட்டும் செய்யப்படும் பிரார்த்தனை, பிரார்த்தனை அல்ல.
- உன்னால் முடிந்ததையெல்லாம் செய்துவிட்டு இறைவனிடம் உதவிகேள்.
- ஏழ்மைப் பார்த்துச் சிரிப்பவன் அதைத் தன் க்கம் இழுக்கிறான்.
- பத்து வலிமை மிக்க மனிதர்களைவிட தன்னிச்சையாகச் செயல்படுபவனே மேலானவன்.
- இட்டப் பணியைச் செய்து முடித்தால் இன்பமான தூக்கம்.
- மூப்பு- இது நோய்கள் சேரும் துறைமுகம்.
- சோதிடம் உண்மை- ஆனால், அதனைச் சோதிடர்கள் கண்டுபிடிக்க முடியாது.
- இயந்திரங்கள் சுழல்வதால் கெடாது; உராய்வதால் கெடும்.
- சரிகை ஆடைகளுடன் எரியூருக்குப் போவதைவிட கூந்தல்களுடன் விண்ணுலம் செல்வது மேல்.
- குண்டூசியை எடுக்கக் குனிய முடியாத மனிதன், ஒரு பவுன் கூட சேர்க்க முடியாது.
- செல்வங்கள் சிரமப்பட்டு சேர்க்கப்படுகின்றன. கவலையுடன் பாதுகாக்கப்படுகின்றன. துக்கத்தோடு இழக்கப் பெறுகின்றன.
- உங்களுடைய உடை உங்களுடைய தொழிலுக்கு ஏற்றபடி பார்த்துக்கொள்ளவும்.
- குலப் பெருமை பேசுபவன் உருளைக் கிழங்கு போன்றவன். கிழங்கைப் போலவே அவன் பெருமையும் மண்ணக்குள் மறைந்திருக்கும்.
- புரியாத காரியத்திற்குத் தாமதமாக் கற்பித்துக்கொள்ளும் வழக்கம் மூட நம்பிக்கை. அது காலம் கடந்தும் தங்கி நிற்கும்.
- கடவுள் நமக்கு உறவினரைத் தந்துள்ளார். ஆனால் அன்பர்களை மட்டும் நாமே தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
- நண்பர்களைப் பற்றி நல்லது பேசு. விரோதிகளைப் பற்றி ஒன்றும் பேசாதே!
- இளமையில் ரோஜா மலர்களின் மீது படுக்க விரும்பினால் முதுமையில் நீங்கள் முட்களின் மீது படுக்க வேண்டிவரும்.
- மூட நம்பிக்கை மனவலிமையற்றவர்களின் மதம்.
- நூறு ஆசான்களுக்கு ஒப்பானவர் பொறுப்பு மிக்க தந்தை.
- காரியங்கள் தாமாக நடப்பதில்லை. நடக்கச் செய்ய வேண்டும்.
- மிகக் குறைந்த முட்டாளே அறிவாளி.
- மற்றவர்களைக் கீழே தள்ளிவிட்டு நீ மேலே ஏற முடியாது.
- செல்வத்திற்குப் பின்னால் வறுமை வருவதைக் காட்டிலும் வறுமைக்குப் பின் செல்வம் வருவது மேல்.
- நாற்பது வயதிற்கு மேல் மனிதன் த்த்துவ ஞானியாக மாறுவான். அல்லது முட்டாளாக மாறுவான். இல்லையெனில் இறந்துவிடுவான்.
- குழந்தைக்கு முதற்பாடம் பணிவு.
- குழந்தைகளே ஏழையின் செல்வங்கள்.
- குழந்தையை கொண்டாடினால் தாயின் அன்பைப் பெறலாம்.
- குழந்தை இல்லாதவனுக்கு அன்பு என்றால் என்ன வென்றே தெரியாது.
- இரண்டு தொட்டில்களை ஆட்டுவதைவிட கலப்பை பிடிப்பது மேல்.
- பெண் தேடி வெகுதூரம் செல்பவன் யாரையோ ஏமாற்றப் போகிறான்.
- குற்றத்தை கடவுள் மன்னிக்கிறார். ஆண்கள் சிறுகச் சிறுக மறக்கிறார்கள். பெண்களோ உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொள்கிறார்கள்.
- விதவை, துக்கம் ஆறும் முன் மணம் செய்துகொள்ள வேண்டும்.
- பொதுவாக எல்லோரும் சந்திக்குமிடம் சமாதிதான்.
- ஆயிரத்தில் ஒரு நல்லவனை அறிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு பெண்ணை அறிந்துகொள்ள முடியாது.
- ஒருவருக்கு ஆகாரமாவது மற்றொருவருக்கு நஞ்சாகும்.
- குழந்தைகள் கண்களைத்தான் உபயோகிக்க வேண்டும். செவிகளை அல்ல.
- கரங்கள் சுத்தமாக இருக்கின்றனவா என்பதைக் கடவுள் பார்க்கிறார். நிறைவாக இருக்கின்றனவா என்பதையல்ல.
- ஒரு சிறு குறை நீண்டகால சேவையை அழிக்கிறது.
- எந்தத் தவறை நீ எங்கு கண்டாலும் அதை உன்னிடம் நீ திருத்திக்கொள்.
- உலகின் நல்லறிவுகள் எல்லாம் பழமொழிகளாக்கப்பட்டிருக்கின்றன.
- வாக்களிப்பது கடன்படுவதுபோல.
- பேச்சில் தங்கம், கொடுப்பது செம்பு.
- நோயின் தந்தை யாரோ? தவறான உணவுதான் அதன் தாய்.
- பழமொழிகள் அனுபவத்தின் குழந்தைகள்.
- கோபக்காரனிடமிருந்து கொஞ்சம் விலகி இரு. மௌனம் இருப்பவனிடமிருந்து என்றுமே விலகி இரு.
- ஓர் ஏழைக்கு மற்றொரு ஏழை உதவும்போது கடவுள் சிரிக்கிறார்.
- தர்மம் ஒருபோதும் ஏழை ஆக்கியது இல்லை. செழுமை ஒருபோதும் அறிவாளியாக்கியது இல்லை.
- கவலைக்கு மிகப் பாதுகாப்பான மருந்து வேலையில் ஈடுபடுதல்
- மகிழ்ச்சி வீட்டில் செய்யப்பட்ட ஒரு பண்டம்.
- எப்போதும் பயந்துகொண்டிருப்பதைவிட ஆபத்தை ஒரு தடவை துணிவாக எதிர்ப்பது மேலானது.
- தாயின் செல்லக் குழந்தைகள் இறுதியில் வெண்ணெய் வெட்டு வீர்ர்களாகவே இருப்பார்கள்.
- பெண் குழந்தைகளும் கோழிக்குஞ்சுகளும் எப்பொழுது தின்றுகொண்டே இருக்கும்.
- நீண்ட கேசம் பெண்ணிற்கு ஒரு கருவூலம்.
- கணவன் இருந்தால் ஒய்யாரம் இறந்தால் ஒப்பாரி.
- எட்டாம் பேறு பெண் என்றால், எட்டிப் பார்த்த வீடு குட்டிச் சுவர்
- அறிவைக் கொண்டவள் சிங்காரி. அகந்தை கொண்டவள் அலங்காரி.
- பெண்ணுகு எதிரி அவள் அழகு.
- கடன் மோசமான வறுமை.
- தண்ணீரைவிட நெருப்புக்குக் கப்பல் அஞ்சுகிறது.
- ஆட்டை கொடுப்பதைவிட கம்பளி கொடுப்பது மேல்.
- ஊதாரி பிச்சைக்காரனாகவே இருக்கிறான்.
- பறவைகளின் காரணமாக உலோபி விதைப்பதில்லை.
- குடிசையைப் பெருக்கிக் கூட்டுபவன் துடைப்பத்தின் மேல் உட்காரக் கூடாது.
- நான் துணி அணிந்த நாளிலிருந்து ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை.
- விதி விரும்பியதை வழி நடத்துகிறது. விரும்பாததை இழுத்துக் கொண்டு செல்கிறது.
- போகவிட்ட ஒரு சொல்லும் ஒரு கல்லும் திரும்ப அழைத்துக் கொள்ள முடியாதவை.
- தொழிலை நேசிக்காதவனை தொழிலும் நேசிக்காது.
- நாய் குரைக்காததும் குதிரை கனைக்காததுமான நகரத்தில் நீ வசிக்காதே!
- பதற்றத்துடன் வருபவன் திடீரென விழுகிறான்.
- எல்லா விலைகளையும் கணக்குப் பார்ப்பபவன் ஒருபோதும் கலப்பையை மண்ணில் வைக்க மாட்டான்.
- பூமித்தாயின் தொழில் உறவுகொண்ட ஒருவரும் நஷ்டமடைந்து வெளியேறியதில்லை.
- உண்மை எப்போதும் ஒரு நொண்டித் தூதுவன் மூலம் வருகிறது.
- உண்மை ஒரு கீறலான முகத்தைப் பெற்றிருக்கிறது.
- சரியான பொய்யைச் சொல்வதைவிட கொடூரமான உண்மை பேசுவது மேல்.
- பாதி உண்மை முழுப் பொய்.
- துருப்பிடித்த வாள், காலியான பணப்பை உடன்படிக்கைகளை எதிர்த்துப் பேசும்.
- உன் உணவை உண்பதற்கு ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை.
- ஆபத்துக்களையும் அபாயங்களையும் பற்றி முன்கூட்டியே ஆராய்ந்து கொண்டிருப்பவன் ஒருபோதும் யாத்திரை செல்ல மாட்டான்.
- எங்கே ஆதாயம் பின்தொடர்கிறதோ, அங்கே வலிமறக்கப்படுகிறது.
- கடன் வாங்கிய ஆடைகள் ஒருபோதும் நன்கு பொருந்தாது.
- பிறருக்காக இரக்கப்படுவன் தன்னையும் எண்ணிப் பார்த்துக்கொள்ளட்டும்.
- ஆன்மாவைவிட உடல்தான் அதிகமாக ஆடை அணிந்திருக்கிறது.
- ஆன்மா எங்கு வசிக்கிறதோ அந்த இடத்தில் அது இல்லை. அது நேசிக்கும் இடத்தில் ஆன்மா இருக்கிறது.
- மூடுபனிக்கு வழியனுப்பு விழா. அடுத்தது சுகமான பருவகாலம்.
- தனது அறிவைப் பாராட்டிக் கொள்பவன் அவனுடைய அறியாமையைத் தம்பட்டம் அடிக்கிறான்.
- அறம் மிகவும் விலை உயர்ந்த ஆபரணம்
- அறம் தன்னுள் எல்லாப் பொருட்களையும் பெற்றிருக்கிறது.
- கோழையின் அறம் ஐயத்திற்குரியது.
- பாவமாவது அறத்தின் பழக்கத்தால் அடிக்கடி உடைந்து போகிறது.
- ஒரு நல்ல மனிதனுக்கு அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டு. அவன் அதை அறமாக மாற்றுவான்.
- பொருள் இலாபம் கருதும் மனிதனின் மனத்திலிருந்து அறம் பறந்துபோகிறது.
- அறம் மட்டுமே உண்மையான குடிமை.
- காதலிலும் போரிலும் எல்லாமே அழகுதான்.
- அச்சத்திற்கு மருந்தில்லை.
- புலியின்மேல் சவாரி செய்பவர் கீழே இறங்குவதற்கு அஞ்சுகிறார்.
- அவன் என்னவாக இருக்கிறான் என்பதை அவனது உரையாடல் காட்டுகிறது.
- குற்றத்தின் மூலம் எவன் ஆதாயம் அடைகிறானோ, அவனே அக்குற்றத்தைச் செய்கிறான்.
- சம்பவம் நடந்த பிறகு புத்திசாலியாக இருப்பது சுலபமே!
- நீண்ட பயணத்திலோ அல்லது சிறு சத்திரத்திலோ ஒரு மனிதன் தன்னுடைய நண்பனைப்பற்றித் தெரிந்துகொள்கிறான்.
- மயில் ஓசையோடு அகவும்போது நாம் மழையையும் சண்டையையும் பெறலாம்.
- மரியாதையை விரும்புகிறவர்கள் மரியாதைக்குத் தகுதி உடையவர்கள் அல்லர்.
- அடிக்கடி வரும் விருந்தாளிளுக்கு நல் வரவேற்பு இல்லை.
- கடனாக வாங்குவதைவிட விலைக்கு வாங்குவதே மேல்.
- எசமான்னாக இருக்கும் முன் ஒருவன் வேலைக்காரனாக இருக்கவேண்டும்.
- வைகறையில் எழாதவன் ஒருபோதும் ஒருநல்ல நாள் வேலையைச் செய்யமாட்டான்.
- சாந்தமான மனசாட்சி இடியோசையில் உறங்குகிறது.