- ஒரு பெண் மற்றொரு பெண்ணை ஒருபோதும் புகழ்ந்து பேசமாட்டாள்.
- உயர்வான இடத்தைச் சுற்றிப் போ; தாழ்வான இடத்தைத் தாண்டிப் போ.
- அருமையான குழந்தைக்குப் பிரம்பு தேவை.
- பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம் அவர்கள் விற்பனைக்கு உரிய பொருள்கள்.
- பெண் குழந்தைகள் உன் முழங்கால் அளவிற்கு வளர்ந்து விட்டால் அவர்களின் சீதனப் பெட்டிகள் மார்பு அளவு இருக்க வேண்டும்.
- தந்தையின் பாசம் சவக்குழி வரை; தாயின் பாசம் சிரஞ்சீவியானது.
- முதலில் முட்டையிடு; பின்னர் கொக்கரி.
- நல்ல மனசாட்சி இறைவனின் குரல்.
- அழுதுகொண்டே உலகிற்கு வருகிறாய். ஆனால், சிரித்துக் கொண்டே அதை விட்டுச் செல்லும்படி வாழ்வாயாக!
- நாய்க்கு உணவளிக்காதவன் கள்வனுக்கு அளிப்பான்.
- பொய் கனவின் ஆரம்பம்.
- நல்ல மனசாட்சி மென்மையான தலையணை.
- குறைவாகச் சாப்பிட்டு விட்டோம் என்று ஒருபோதும் கவலை கொள்ளாதே!
- வேறொருவனிடம் சொல்ல வேண்டியதை முதலில் உனக்கே சொல்லிப் பார்.
- இலாபமும் நட்டமும் இரட்டைச் சகோதரர்கள்
- நரகத்தில் விசிறிகள் இல்லை.
- ‘உழைப்பே வாழ்வு’ என்பதை உணர்ந்து உழைத்திடு.
- நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடு கட்டும்.
- பெருமை மடமையின் மிகத் தெளிவான அடையாளம்.
- பணக்காரனிடம் பணம் இருக்ககிறது. ஏழைகளிடம் மன அமைதி இருக்கிறது.
- சாவுக்குப் பயந்தவன வாழ்வை இழந்துவிட்டான்.
- வானில் பறவையின் பாதையைக் காண முடியாது. காதலியை நாடும் காதலன் காதையையும் காண முடியாது.
- வீட்டைக் கட்டிப் பாராதவன் மணிலிருந்து அவர்கள் முளைத்து இருப்பதாகக்கூட நினைக்கக் கூடும்.
- பிறர் புகழும் குதிரையை வாங்கு. பிறர் குறை பேசும் பெண்ணை மணந்துகொள்.
- மதிய உணவிற்குப் பிறகு இரண்டடியாவது நட.
- மடையனைத் திருத்தலாம். ஆனால், முரடனைத் திருத்த முடியாது.
- சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன். அத்தகைய கடிகாரம் ஓடினால் என்ன? நின்றால் என்ன?
- நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உனது உயருள்ளபோதே நீ தேடிவைத்துக்கொள்ள வேண்டும்.
- அன்னை உன்னைப் பத்து மாதங்கள் சுமந்தவள். மூன்று ஆண்டுகள் பாலூட்டி வளர்த்தவள். உனக்கு எல்லாம் அவள்தான். அவள் உன்னைப்பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படியாக நடந்துவிடாதே!
- உலகில் மனிதனைவிட உயர்ந்த பொருள் ஏதும் இல்லை. மனிதனின் மனத்தைவிட உயர்ந்த பொருளும் ஒன்றில்லை.
- வெட்டி வீழ்த்திய கோடரியையும் மணக்கச் செய்கிறது சந்தனம்
- மழைக்காலத்தில் பயணம் புறப்பட விரும்புவாய்; ஆனால் கோடைக்காலத்தில் சக்கரங்கள் செய்.
- அதிகமாகப் பயன்படுத்தப்பட கலப்பை மின்னுகிறது. தேங்கிய தண்ணீர் நாறுகிறது.
- கொண்டு வருபவர் இல்லையென்றால் பெற்றுக் கொள்பவரும் இலை. திருடர்கள் இல்லையென்றால் வேலியும் இல்லை.
- உழுகின்ற கைகளையும் ரொட்டிக்கு மாவு பிசையும் கைகளையும் போற்றி வணங்கு.
- கடவுளுக்குக் காலம் உண்டு; உழவர்களுக்கு ரொட்டியுண்டு.
- வசந்த காலத்தில் உழவன் ஒரு மூட்டை அறியாமையைச் சுமக்கிறான். இலையுதிர் காலத்தில் ஒரு மூட்டை அறிவைச் சுமக்கிறான்.
- பித்தளை ஏழைகளின் தங்கம், ஈயம் தேவையானவர்களுக்கு வெள்ளி.
- புண்ணியவதியும் உடைந்த காலும் வீட்டிலேயே தங்கிவிட வேண்டும்.
- எது உன்னை அடிக்கிறதோ அது உனக்கொரு பாடம். எது உன்னை இழந்ததோ அது வீணானது.
- எங்கு உன்னால் எதையும் எட்டிப்பிடிக்க முடியவில்லையோ, அங்கு உன் கையை நீட்டாதே!
- பெண்ணிடம் சொன்ன இரகசியத்தைவிட, அதிகத் தண்ணீரை சல்லடை பிடித்து வைத்திருக்கிறது.
- போதும் என்பது ஒவ்வொருவரின் எஜமான்ன்.
- மருமகள் மாமியாரின் மருந்து.
- எவருக்கும் தாயும் தந்தையும் கற்றுத் தரவில்லையோ அவருக்கு உலகம் கற்றுத் தருகிறது.
- மிகுந்த பணிவு பாதி கர்வம்.
- சமமான பாதையில் ஒரு சிறு கல்கூட சுமை வண்டியைப் புரட்டிவிடும்.