• உரையாடல் பயணத்திற்கு ஏணி.
  • பொன்னாலான ஆயுதத்தால் குத்திய குத்தும், மற்ற எந்த ஆயுதங்களையும் போலவே வலி நிறைந்ததே!
  • சுய கட்டுப்பாடு ஒருவனை இறைவனிடம் சேர்க்கிறது.
  • உன் மகன் நல்லவனாக இருந்தால் நீ ஏன சேமிக்க வேண்டும்? உன் மகன் தீயவனாக இருந்தால் அவனுக்காக நீ ஏன் சேமிக்க வைக்க வேண்டும்?
  • குழந்தைக்குச் சோறு கொடுத்தால் தாய்ப்பாலை மறக்கும். பெண்ணுக்குக் கணவன் வந்தால் தாயை மறப்பாள்.
  • திட்டுவதில் ஐம்பது நாக்குகள் படைத்தவன் கூட ஒரு நாக்கு படைத்த பெண்ணிற்கு நிகராக முடியாது.
  • பழக்கமில்லாமல் ஒருவன் தன் பற்களைக்கூட சுத்தம் செய்ய முடியாது.
  • யாராவது உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைக்கும்பொழுதெல்லாம் உங்களிடம் உள்ள கேடயம் ஞாபகம் வந்து அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். என்ன கேடயம்? நீங்கள் அவர்களிடத்தில் காட்டிய அன்பு.
  • உரையாடல் காதுகளின் உணர்வு.
  • நல்ல உரையாடல் நல்ல படுக்கையைவிட மேலானது.