- அதிகாலையில் எழுந்தவனும் இளவயதில் மணந்தவனும் எக்காலத்தம் வருந்தியதே இல்லை.
- செல்வம் என்பது பணம் மட்டுமல்ல.
- கணவனின் பலம் கையிலிருக்கிறது; மனைவியின் பலம் நாக்கிலிருக்கிறது.
- கைம்பெண் கூரையில்லாத கட்டிடம்.
- கிழவிகளையும் ஓநாய்களையும் படைத்த இறைவன் உலகைப் பாழாக்கிவிட்டான்.
- சமையல் மோசமானால் ஒருநாள் இழப்பு; அறுவடை மோசமானால ஓராண்டு இழப்பு; திருமணம் மோசமானால் ஆயுள் முழுதும் இழப்பு.
- பயமின்றி வளரும் பெண்குழந்தை பெருமையில்லாமல் இறக்கும்.
- ஊசி இல்லாத பெண், நகம் இல்லாத பூனை.
- ஏழைப் பெண்ணின் வயல் அவள் முந்தானையிலேயே இருக்கும்.
- ஒருத்தியை நீ அடையும்வரை அவள் கவர்ச்சியாகத்தான் இருப்பாள்.
- கணவன் தலை – மனைவி இதயம். இப்படியுள்ள திருமணம் இன்பமானது.
- மாதா கோயிலுக்குச் செல்லும் பாதையில் இருந்து கொண்டு உனக்கு மனைவியைத் தேர்ந்தெடுக்காதே!
- மனைவி, கப்பல், குதிரை இம்மூன்றையும் மற்றவரை நம்பி ஒப்படைக்காதே!
- மற்றவர்களுடைய தவறுகள் நமக்கு நல்ல ஆசிரியர்கள்.
- அமைதியான நீர் ஆழமான குளம்.
- நீதிக்கு நட்பில்லை.
- பழக்கத்தைப் பசி, சத்தியத்தைப் பேசு.
- தீய செயலைப் பனிக்கட்டியின் மேல் எழுது; ஆனால், நற்செயலை பாறையின் மேல் எழுது.
- கடின உழைப்பாளியும் நற்சுகமும் நண்பர்கள்.