• அறத்தின் வாசல் திறப்பதற்குக் கடினம். ஆனால், சுலபமாக மூடப்படாது.
  • தோண்டும் கலையில் ஒரு சுண்டெலிகூட தத்துவ ஞானிக்குப் போதிக்கலாம்.
  • சாமர்த்தியமான மனிதன் பெரும் தொல்லைகளை சின்னவைகளாக மாற்றிவிடுகிறான். சின்னத் தொல்லைகளை ஒன்றமே இல்லாதவைகளாக மாற்றிவிடுகிறான்.
  • சகிப்புத் தன்மை என்ற ஒருசொல்லே ஒரு வீட்டின் விலை மதிக்க முடியாதது.
  • மனிதர்கள் நூறு ஆண்டுகள் வாழ்வதில்லை. எனினும் ஓராயிரம் ஆண்டுகளுடைய துன்பங்களுக்கு இடம் கொடுக்கிறார்கள்.
  • சொர்க்கத்திற்கு ஒரு வழி இருக்கிறது. ஆனால், ஒருவரும் அதில் பயணம் செய்வதில்லை. நரகத்திற்கு வாசல் இல்லை. ஆனால், மனிதன் அங்கே உள்ளே போக ஊடுருவிச் செல்கிறான்.
  • சோம்பேறி நீண்ட நூலைப் பயன்படுத்துகிறான். கைப்பழக்கம் இல்லாதவன் வளைந்த ஊசியைப் பயன்படுத்துகிறான்.
  • கலகக்காரனாக இருப்பதைவிட நாகரீகமற்றவனாக இருப்பதே மேல்.
  • நீ ஒரு நாட்டில் நுழையும்போது அங்கு விலக்கப்பட்டவைகள் என்னவென்று விசாரித்துக்கொள்.
  • கைக்கும் வாய்க்கும இடையே நிறை இழப்பு இருக்கிறது.
  • இழந்துபோனது எப்போதும் ஒரு தங்கப் பிடியைப் பெற்றிருக்கிறது.
  • பத்தில் மூன்று பகுதி மனிதனுடைய திறமையைப் பொறுத்தது. பத்தில் ஏழு பகுதி அவனுடைய ஆடையை பொறுத்தது.
  • புதுத் துணிகளும் பழைய நண்பர்களும் இனிப்பவர்கள்.
  • சிறு அன்புடமையை மறக்காதே!. சிறு தவறுகளை நினைக்காதே!
  • மனிதனின் இதயம் இயற்கையிலேயே நீதி நிறைந்தது.
  • என்னுடைய தவறுகளை எனக்குச் சொல்பவர் என்னுடைய ஆசிரியராக இருக்கிறார். என்னுடைய புண்ணியங்களை எனக்குச் சொல்பவர் எனக்குத் தீங்கு செய்கிறார்.
  • ஓராயிரம் மைல் தூரத்திற்கு அப்பாலும் அன்பு ஒன்று மட்டும் அழுத்தமாய் பதிகிறது. கண்டிப்பு அல்லவே அல்ல.
  • வீட்டிலிருந்து வெகு தூரத்திற்குச்சென்று தூப தீபங்கள் கொளுத்துவதைவிட அருகிலேயே அன்புடைச் செயல் செய்வது மேலானது.
  • பிறரைக் கடிந்து கொள்வதுடன் தன்னையே கடிந்துகொள்வதற்கும் உன் இதயத்தைப் பயன்படுத்தினால் குறைகள் குறைவாக இருக்கும்.
  • ஒவ்வொரு காலையிலும் மனிதன் அவனுடைய தலைமுடியை வாரி ஒழுங்குபடுத்திக் கொள்கிறான். ஏன் அவனுடைய இதயத்தை அவ்வாறு செய்யக்கூடாது.
  • கொடுப்பதன் எண்ணிக்கையைக் கொண்டு ஒரு மனிதனுடைய அன்பான இதயத்தை அளக்க முடியாது.
  • தலைசிறந்த ஆறு சிறிய ஓடைகளை ஒதுக்குவதில்லை.
  • ஆறுகள் ஊற்றுக்களைப் பெற்றிருக்கின்றன. மரங்கள் வேர்களைப் பெற்றிருக்கின்றன.
  • ஒருவரை ஏழு குழந்தைகள் காத்திடார். அறிவுச் செடி காக்கும்.
  • கடும் சினம், பேசும்போது அறிவுடைமை தன்முகத்தை முக்காடிட்டு மறைத்துக் கொள்கிறது.
  • அறிஞர் என்ன செய்கிறார என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், சொல்ல முடியாததை ஒருபோதும் அவர் செய்வதில்லை.
  • ஒன்றை எப்படிச் செய்வது என்று அறிபவர் அதைக் கடினம் எனக் காட்ட மாட்டார். கடினம் எனக் காண்பவர் அதை எப்படிச்செய்வது என அறியமாட்டார்.
  • அறியாமை மனத்தின் இரவு. நிலவும் நட்சத்திரங்ளும் இல்லாத ஒரு இரவு.
  • பார்க்கப்படுவதற்கு செய்யப்படும் அறம் உண்னையான அறம் அல்ல. பார்க்கப்டுவதற்கே பயங்கரமான பாவம் உண்மையான பாவம்.
  • நீ தர்ம குணம் உள்ளவனாக இருந்தால், உன்னால் பணக்காரனாக முடியாது. நீ பணக்காரனாக இருந்தால் உன்னால் தர்ம குணம் உள்ளவனாக இருக்க முடியாது.
  • ஒரே அறநெறியை உடைவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கின்றனர். ஒரே வியாபாரத்தை நடத்துகிறவர்கள் ஒருவர்யொருவர் வெறுக்கின்றனர்.
  • அழகிய பறவைதான் கூண்டில் அடைபடுகிறது.
  • பாலங்களைக் கட்டுபவரும், சாலைகளைச் சீர்படுத்துபவரும் இரு கண்களையும் இழந்து குருடராகிவிடுவார்கள். கொலை புரிபவரும், வீட்டுக்கு நெருப்பு வைப்பவரும் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
  • அதிர்ஷ்டம் வந்தால் யார் வருவதில்லை? அதிர்ஷ்டம் வராவிட்டால்யர் வருவார்கள்?
  • மெதுவாகப் போவதற்கு அஞ்சாதே! இன்னும் நின்றுகொண்டு இருப்பதற்கு மட்டும் அஞ்சு.
  • அச்சத்தினால் சாகின்றவனுக்கு மாதா கோயில் முற்றத்தில் ஓர் இடத்திற்குத் தகுதியில்லை..
  • அவைகள் உங்களுடைய சொந்தமானதைப் போல மனிதர்களுடைய புண்ணியங்களையும் பேசுங்கள். அவர்கள் அடைய வேண்டிய தண்டனைக்கு நீங்களே உரியவ்ர்கள் என்பதைப்போல் அவர்களுடைய பாவங்களைப் பேசுங்கள்.
  • இந்த உலகத்தில் மகிழ்ச்சி எதுவாக இருந்தாலும் மற்றவர்கள் நலம் பெற வேண்டும் என்று விருப்பத்திலிருந்து எழுகிறது. இந்த உலகத்தில் துன்பம் எதுவாக இருந்தாலும் சுயநலத்திற்கு இடம் கொடுப்பதிலிருந்து அது தோன்றுகிறது.
  • மருந்து குணமாக்க நோயைக் குணப்படுத்துகிறது.
  • நீ மலைமேல் ஒருபோதும் ஏறவில்லை என்றால் சமதளம் எதைப்போல் இருக்கிறது என்று நீ ஒருபோதும் அறியமாட்டாய்.
  • ஒரு பெரிய மனிதர், ஒரு சின்ன மனிதரின் தவறுகளைப் பார்க்கமாட்டார்.
  • நீ வணங்குவதாக இருந்தால் தாழ வணங்கு.
  • ஒரு மனிதன் வீட்டுக்கு வருபவர்களை வரவேற்காவிட்டால் தூர தேசம் போகும்போது அவன் உபசரிப்பவர்களைப் பெறமாட்டான்.
  • நல்ல வினா ஒரு அழகிய மணியைப் போன்றது.
  • வீடு கட்டு; உறவினர்களிடமிருந்து மிகத் தூரமாகவம், நீர் நலைகளுக்கு அருகாமையிலும்.
  • அதிக வேலைக்காரர்கள் அதிகப் பகைவர்கள்.
  • கேள்வி கேட்பவன் ஐந்து நிமிடங்களுக்குத்தான் முட்டாள் கேள்வியே கேட்காதவன் எப்போதும் முட்டாள்.
  • இவ்வுலகில் முடியாத்து ஒன்றுமே இல்லை. ஒரே யொரு அச்சம் உறுதியுடைய மனிதர்கள் தேவைப்படுகின்றனர் என்பதுதான்.
  • வயிற்றைப் பற்றியே நினைப்பவன் தலையைப் பட்டினி போடுகிறான்.
  • மலைகளின் ஏகாந்தத்தில் படிப்பது பாதைகளின் சந்திப்பில் அமர்ந்துகொண்டு மனிதர்களின் பேச்சைக்கேட்பதற்குச்சம்ம்.
  • மாபெரும் மனிதர்களின் அரண்மனைகள் முழுவதும் பெண்கள். ஏழைகளின் குடிசை முழுவதும் குழந்தைகள்.