• அறிவைவிட தைரியத்தினால்தான் பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன.
  • அநேக சமயங்களில் ஒரு மனிதனின் அறியாமைக்காக ஒரு நாடே துன்பப்படுகிறது.
  • அழகிய பெண் எது செய்தாலும் நம்மால் குற்றம் கண்டுபிடிக்க முடியாது.
  • அடுத்த வீட்டுக்காரர் குழந்தைகளே எப்போதும் மோசமான குழந்தைகள்.
  • அறிஞர்கள் அறிவைத் தேடுகிறார்கள். முட்டாள்கள் அதைப் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.
  • அழகான கடைக்காரி புளித்த கள்ளையும் விற்க முடியும்.
  • அதிகப் பேச்சு, பொய் இவை இரண்டும் நெருங்கிய உறவினர்கள். ஆணும் பெண்ணும் தனியாக இருக்கும்போது அவர்களுக்கு இடையில் ஒரு உறுதியான சுவர் இருக்கட்டும்.
  • ஆணகள் சந்திக்கும்போது ஒருவர் பேச்சை ஒருவர் கேட்கிறார்கள். பெண்கள் சந்திக்கும்போது ஒருவரையொருவர் பார்க்கிறார்கள்.
  • இறந்துபோன மனைவியும், உயிருள்ள ஆடுகளும் ஒரு மனிதனைச் செல்வனாக்கும்.
  • இதயமும் நாக்கும் சிறியவை. ஆனால், அவை ஒரு மனிதனின் உயர்வைக் காட்டுகின்றன.
  • இளங்கன்னிகள் திராட்சைப் பழங்கள்.
  • இளமையில் சூதாடுபவர்கள் முதுமையில் பிச்சை எடுப்பார்கள்.
  • இசைக்கருவியைப் போல் காதலியை மீட்டிவிட்டு உயரே தூக்கி வைத்திட முடியாது.
  • இதயம் சாவதைவிட கண்கள் சாவது மேலானது.
  • உலகமானது வீர்ர்க்கே உரியது.
  • உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே கொள்ளுங்கள். எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்காதீர்கள்.
  • உழைப்பின் வேர்கள் கசப்பானவை; அதன் கனிகள் இனிப்பானவை.
  • கணவனின் அன்பு – பெண்ணின் வாழ்வு.
  • கண் உள்ளவனைக் காட்டிலும் குருடன் குறைவாகவே தடுக்கி விழுகிறான்.
  • கறுப்பும் ஒரு நிறமே.
  • கண்ணாடிக்குள் இருக்கும் பெண்ணையே ஒவ்வொரு பெண்ணும் நேசிக்கிறாள்.
  • கடன்படுகிறவன் எவனோ அவன் கவலையைத் தேடி கொண்டிருக்கிறாள்.
  • கணவனுக்கு குணத்திற்கு முன்னால் அறிவு தேவை. மனைவிக்கு அறிவுக்கு முன்னால் குணம் தேவை.
  • கடிதம் பாதி சந்திப்புக்குச் சமம்.
  • காப்பியும் காதலும் சூடாயிருந்தால்தான் சுவைக்கும்.
  • காதலின் கண்ணுக்கு ரோஜா மலர்தான் தெரியும். முட்கள் தெரியாது.
  • குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பவள் காவிய மனைவி.
  • குடுட்டுக் குதிரையை விற்பவன் அதன் கால்களைப் புகழ்வான் கொடுத்த வாக்குறுதகளை உடனே நிறைவேற்றாவிட்டால், அது நாளுக்கு நாள் தேய்ந்து விடும்.
  • கூக்குரலைவிடப் பெருமூச்சு அதிக தூரம் செல்கிறது.
  • சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுதுகொண்டு தொங்கும்.
  • சொத்தையான விதையைப் போட்டுவிட்டு முளைக்கவில்லையே என்று வருந்துகிறவன் படுமுட்டாள்.
  • தந்திரம் ஆடையணிந்து செல்ல வேண்டும். ஆனால் சத்தியம் நிர்வாணமாக செல்கிறது.
  • தன்னை அறிவது அறிவு. தன்னை மறப்பது மடமை.
  • தானும் கட்டளையிட மாட்டான். பிறரின் கட்டளைக்கும் கீழ்ப்படியமாட்டான். அவன்தான் ஒன்றும் உதவாதவன்.
  • பணக்காரனாக விரும்புகிறவன் தனது மனசாட்சியை தன் பெட்டியினுள் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பயந்தவன் பத்து தைரியசாலிகளைப் பயந்தாங்கொள்ளிகளாக ஆக்கி விடுவான்.
  • நட்பு என்ற செடிக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  • நல்லவளாக இருப்பதைவிட அழகியா இருப்பதையே ஒவ்வொரு பெண்ணும் விருப்புகிறாள்.
  • நீ மற்றவர்களுக்குக் கொடுக்க விரும்பாததை, மற்றவர்களிடமிருந்து நீ கேட்க்க் கூடாது.
  • நீ போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய். கடல் பயணம் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய். ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொள்ளும்போத மூன்று தடவை பிரார்த்தனை செய்.
  • நெருப்பில் ஊதினால் கண்களில் தீப்பொறிகள் விழும்.
  • நீ பலமுள்ளவனாக இருக்க விரும்பினால் உன்னுடைய பலவீனங்களைத் தெரிந்துகொள்.
  • நோயைத் தெரிந்து கொள்பவன்தான் மருத்துவன்.
  • நெருப்புக்காகப் புகையைப் பொறுத்துக்கொள்கிறோம்.
  • நேராக இதயத்திலிருந்து வருவது நேராக இதயத்திற்கு செல்கிறது.
  • மனைவி வரும்வரை என் மகள் என்னுடைய மகள். என் மகள் அவள் வாழ்நாள் முழுவதும் என்னுடைய மகள்.
  • முதுமை எல்லா நோய்களையும் ஏற்றுக்கொள்ளும் மருத்துவமனை.
  • முதுமையில் எவ்வளவு தேவைப்படும் என்பது இளமைக்குத் தெரிந்தால் அது அடிக்கடி தன் பணப் பையை மூடிக்கொள்ளும்.