- ஆசை இல்லாத மனிதன் ஆத்ம மகனல்ல.
- கண் மறைந்ததும் மனமும் மறைகிறது.
- வேட்கை வாலிபத்தின் தவறல்ல.
- காலத்தாலும், பொறுமையாலும் முசுக்கொட்டை இலை பட்டாசு ஆகிவிடுகிறது.
- முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்துவிடாதே, உன்னை விழுங்கிவிடும்.
- பழம் இருக்கும் மரத்தை நோக்கித்தான் கற்களையும் கழிகளையும் விட்டெறிகிறார்கள்.
- பெண்ணால் துயரமே வரும். இருப்பினும் பெண் இல்லாத வீடே இருக்க முடியாது.
- பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்; இல்லாதவனுக்கு கவலை.
- பணக்காரன் பைத்தியக்காரனைப் போல.
- முகத்துதி செய்வது திட்டுவதைவிட மோசமானது.
- கன்னிப் பெண்ணைச் சுட்டாலும் சுடு. ஆனால், அவளை அவதூறாக மட்டும் பேசாதே!
- மக்கள் உன் நற்பெயருக்கு தீங்குச் செய்யலாம். உன்னுடைய நற்குணத்திற்கு அல்ல.
- ஒவ்வொரு மனிதனும் தனது நாட்டை நேசிக்கிறான். அது நரகமாக இருந்தாலும் கூட.
- குறைவாகக் கொடுப்பவன் தனது நெஞ்சத்திலிருந்து கொடுக்கிறான். மிகுதியாக்க் கொடுப்பவன் தன் செல்வத்திலிருந்து கொடுக்கிறான்.
- மன்னன் ஒருபிடி உப்பைத் தனக்கென்று அள்ளினால், மறு வினாடி உப்பு மலையே காணாமல் போய்விடும்.
- வாலிபன் கண்ணாடி மூலம் பார்த்து அறிவதை, அனுபவசாலி செங்கல் மூலம் கூடப் பார்த்துத் தெரிந்துகொள்வான்.
- காதல், இருமல், புகை, பணம் ஆகியவை நெடுநாள் அந்தரங்கமாக இருக்க முடியாது. என்ன செலவழிக்கிறான் என்று அறிய மாட்டான்.
- சந்தேகப்படுபவனை வேலைக்கு வைக்கக் கூடாது. வேலை செய்கிறவர்களைச் சந்தேகப்படக்கூடாது.
- வேறு அழகு எதுவும் இல்லை, உண்மையைத் தவிர.