- நன்கு உடுத்தினவர்களுக்கு கடவுள் குளிரைக் கொடுக்கிறார். ஆனால் குறைவான துணி உடையவர்களுக்கு கடவுள் சிறிதே குளிரைக்கொடுக்கிறார்.
- முடிவில் என்னையே குறி வைக்காத ஒருவனுக்கும் நான் வில், கலை கற்றுக்கொடுக்கவில்லை.
ஹிப்ரூ
- சிறந்த போதகர் – இதயம், சிறந்த ஆசிரியர் – காலம், சிறந்த நூல் – உலகம், சிறந்த நண்பர் – கடவுள்.
- துன்மார்கத்தவர்களின் மகிழ்ச்சியும், நன்மார்க்கத்தவர்களின் மனத்துயரும் அறிவுக்கு எட்டாதவைகளாக உள்ளன.
- பஞ்சம் ஏழாண்டுகள் நீடித்திருக்கிறது. ஆனால், அது வேலை செய்பவருடைய கதவு வழியாக்க் கடந்து செல்கிறது.
- அறிவுள்ள மனிதனின் அறிவுரையைக் கேட்பதாக இருந்தால் அவருடைய அறிவில் பாதி நீ பெற்றிருக்க வேண்டும்.
- நல்லதும், தீயதும் அறிந்தவர் ‘அறிஞர்’ என்று அழைக்கப்படுபவர் அல்லர். ஆனால், இரண்டு தீயவைகளில் குறைவான தீயதை அறியக்கூடிவரே அறிஞர்.
- அறிவு தலைக்கு கிரீடம். அடக்கம் காலுக்குச்செருப்பு.
- ஏழைகளுக்குத் திறக்காத கதவு வைத்தியனுக்குத் திறக்கும்.
- சத்தியம் கடவுளுடைய முத்திரை.
- இவ்வுலகில் கடமை என்ற பாதையே மறு உலகில் சொர்க்கத்தின் பாதை.
- மனிதனுடைய எல்லா நோய்களுக்கும் மூல காரணம் இரத்தம்.
- ஆசை கண்ணைக் குருடாக்குகிறது. காதைச் செவிடாக்குகிறது.
- கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்லன். அதிகம் விரும்புகிறவன்தான் ஏழை.
- சொற்களை எடை போட வேண்டும் எண்ணக்கூடாது.
- கடலைப் பிரித்தால் சிற்றோடைகளாகிவிடும்.
ஸ்பெயின்
- மரியாதையின் மலிவான பொருள் வேறில்லை.
- இறந்தவர்கள் இருப்பவர்களின் கண்களைத் திற்க்கிறார்கள்.
- இறைவன் ஏழையை நேசிக்கலாம். ஆனால், அழுக்கடைந்தவனை அல்ல.
- நண்பன் கேட்கும்போது ‘நாளை’ என்ற சொல் இல்லை.
- அகந்தை அல்லது பலவீனத்தால் ‘இல்லை’ என்று சொல்லாதே!
-
வழக்கறிஞரின் பிரியம் சிறிதளவு செல்வம்
மருத்துவரின் பிரியம் சிறிதளவு உடல்நலம்
சன்னியாசியின் பிரியம் சிறிதளவு மரியாதை
சயாம்
- வானத்தை நோக்கி ஒருவன் துப்பினால் அது அவன் முகத்திலேயே விழும்.
- தெளிவானதொரு குறிகோளை நோக்கி முயற்சி செய்.
- தாமரை இலை நீர்போல் பெண் மணம் நிலையற்றது.
- சமயத்தில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் தங்க ஆப்பிள் மாதிரி.
- ஆசிரியர்களை அவர்கள்முன்னிலையில் புகழ்ந்து பேசு. கீழ் அதிகாரகளை அவர்களுடைய வேலையைச்செய்து முடித்தபிறகு புகழந்து பேசு. நண்பர்களை அவர்கள் இல்லாதபோது புகழ்ந்து பேசு.
போஸ்னியா
- இரு பொருட்கள் உலகை ஆளுகின்றன. அவை ரட்சிப்பும், சிட்சிப்பும்.
யுக்ரேனியா
- கூன்னின் முதுகு கல்லறையில்தான் நிமிர்த்தப்படும்.
- குழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்ளும்போது கை நோகிறது. அதைக் கீழே விட்டால் மனம் நோகிறது.
வேல்ஸ்
- நீ ஒரு பாம்பைக் கொல்வதனால் அதனுடை வாயைக்கூட அழித்துவிடு.
- எது அடிக்கடி பார்க்கப்படவில்லையோ அது ஒதுக்கப்பட்டது.
பின்லாந்து
- முள்ளின் மேலே பிறந்தவன் முள்ளின் மேலேயே சாவைத் தேர்ந்தெடுப்பான்.
- நல்ல மணியின் ஓசை தூரத்திலும் கேட்கும். கெட்ட மணியின் ஓசை அதைவிட அதிக தூரத்தில் கேட்கும்.
டச்சு
- துளை அளவிற்கு ஆணியும் துயர் அடைகிறது.
- கப்பல் முழுவதையும் இழப்பதைவிட நங்கூரத்தை இழப்பது மேல்.
- இரவும் இருளும் எண்ணங்களின் அன்னையர்.
- நீண்ட நேரமாக உண்பது, சுருக்கமாக வழிபாடு செய்வதை போலவே மிகவும் விரும்பப்படுகிறது.
- உண்மை கடவுளின் முத்திரை.
- சேதம் ஏதும இல்லாமல் எல்லா ஆதாயங்களுடன் உண்மை தோற்றமளிக்கிறது.
- எண்ணெய் ஆரம்பத்தில் சிறந்தது. தேன் முடிவில் சிறந்தது. மது நடுவில் சிறந்தது.
- வாலின் அறிவுரையை ஏற்றுக்கொண்டால் தலை தன் தலையை இழக்கிறது.
- தங்கத்தில் நட்டத்தைவிட தவிட்டில் வரும் ஆதாயம் மேல்.
- தூப கலசத்திலிருந்து வரும் புகையும் வாசனையும் பிரிக்க இயலாதவை.
- பொருளாசையே உலக அமைதியைக் கெடுக்கிறது.
- சமாதான காலத்தில் போர் சிப்பாய்கள் வெயில் காலத்தில் தீப்போல.
- மிகப்பெரும் அதிர்ஷ்டம் ஒரு நல்ல கணவன். அதற்கடுத்து நன்றியுள்ள வேலைக்காரன்.
பிலிப்பைன்ஸ்
- ஆத்மாவின் நோய்களே பாவங்கள்.
- அழுக்குப் பிடித்த கைகளை உடையவளை நம்பி நூல் சிக்கலை அவிழ்க்க கொடுக்காதே!