• ஒருவனிடத்தில் பணம் இருக்கிறது. மற்றொருவனிடத்தில் பணப் பை இருக்கிறது. உலகில் இப்படித்தான் நடக்கிறது.
  • திருமணத்தை ஒரு முறை செய்துகொள்வது கடமை. இருமுறை செய்துகொள்வது முட்டாள்தனம். மும்முறை செய்து கொண்டாலோ பைத்தியக்காரத்தனம்.
  • சன்னலருகே உட்காரந்திருக்கும பெண் ஒரு நெடுஞ்சாலையில் உள்ள மரத்தில் பழுத்திருக்கும் திராட்சைப் பழக் கொத்துக்களைப் போன்றவள்.
  • சாபங்கள் – கோழிக்குஞ்சுகள் போன்றவை. அவை வீட்டிற்குத் திரும்பிவிடும்.
  • நண்பர்கள்தான் மிக நெருங்கிய உறவினர். காதல் கடிதம் எழுதும் காதலி மெலிகிறாள். கடிதம் கொண்டுபோய்க் கொடுப்பவர்கள் இரு பக்கங்களிலும் பணம் கிடைப்பதால் கொழுக்கிறார்கள்.
  • முடியாமைகள் மீது மோதிப் பார்ப்பதற்கு அறிவாளி எப்போதும் விரும்ப மாட்டான்.
  • நீ என்பது என்னவென்று சொல். நீ யார் என்பதை நான் சொல்கிறேன்.
  • நேற்று செய்த தவறை ஒத்தக்கொண்டால் இன்று நீ அறிவாளி என்பதை உணர்த்தும்.
  • வைரம் போன்ற மகள் திருமணமானதும் கண்ணாடியாக மாறுகிறாள்.