பணியிலிருந்து ஓய்வு பெறப் புதிய திட்டங்கள் பணியில் இருப்பவர்களுக்கு புதிய – சட்டங்கள் – இவை நாட்டின் தற்போதைய நடப்புகள்.
அடுத்த தலைமுறைக்கு அரசு வேலை என்பது மறக்கப்பட்ட வாய்ப்பாகவே போய்இடக்கூடும் என்பது தேசம் முழுவதும் தெரிகிற அறிகுறிகளால் உறுதிப்பட்டு வருகிறது.
தனியார் பணியோ, அரசுப் பணியோ, தன்னுடைய தனித் தன்மையை யார் வளர்த்தும் கொள்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறுபவர்கள் என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.
Survival of the Fittest என்கிற பொது நிலை ஏற்படுகிற சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?
சமூகத்தில், ஒரு வாய்ப்பைப் பெறுவதற்கான பொதுத் தகுதிகளைக் காட்டிலும், தனித் தகுதிகளே முதன்மைப்படுத்தப்பட்டு வருவதை உணர வேண்டும்.
ஒரு கல்லூரியில் விரிவுரையாளர் படிப்புக்குப் பொதுத் தகுதி சில பட்டங்கள். அவற்றைப் பெற்றாலும், தனித் தகுதியில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதரிது. அதேபோல் தனித் தகுதி உள்ளவர்கள் பணி ஓய்வு பெற்ற பின்னும் தனியார் நிறுவனங்களில் பணி நீடிப்பு தரப்படுகிறது.
எனவே, தன்னம்பிக்கை த்தும்பத் த்தும்ப தனித் தகுதிகளை வளர்த்துக் கொள்வதே வெற்றிக்கு வழி வகுக்கும்.
Leave a Reply