சிபிஎஸ்இ முடிவுகள்-சென்னை மண்டலம் சாதனை

posted in: கல்வி | 0

டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 98.4 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளனர்.

நாடு முழுவதும் நடந்த சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகளில் இன்று சென்னை, அஜ்மீர், பஞ்குலா ஆகிய மண்டலங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் வழக்கம்போல சாதனை படைத்துள்ளனர்.

சென்னை அண்ணாநகர் எஸ்பிஓஏ பள்ளி மாணவி அட்சயா ரங்கராஜன் 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். நுங்கம்பாக்கம் பத்மசேஷாத்ரி பள்ளி மாணவன் ராமநந்தன் 488 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அண்ணாநகர் எஸ்பிஓஏ பள்ளியின் அபிநயா கண்ணையா 481 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் 98.4 சதவிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மற்ற மண்டலங்களுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ மத்திய இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *