மைக்ரோசாப்ட்டின் ‘பிங்’… புது தேடுதல் என்ஜின்!

சான்பிரான்ஸிஸ்கோ: மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் (Bing) எனும் புதிய தேடுதல் எந்திரத்தை (Search Engine) அறிமுகப்படுத்தியுள்ளது.

bing.com எனும் என்ஜின் மிக விரைவானது, தெளிவான, உறுதியான முடிவுகளைத் தரக்கூடியது என்கிறது மைக்ரோசாப்ட்.

ஆன்லைன் தேடலில் கோலோச்சி வரும் கூகுள் மற்றும் யாஹூவுக்குப் போட்டியாகவே இந்த பிங்க் உருவாக்கப்பட்டுள்ளதாக துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இனி எம்எஸ்என் லைவ் சர்ச் என்பதற்கு பதில் பிங்க் தளம் இடம்பெறும். இந்தத் தளத்தில் பல புதிய வசதிகளைச் செய்து தர உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

“இந்த தளத்தில் குறிப்பிட்ட ஒரு சொல்லை அடித்து தேட ஆரம்பித்தால், அதன் வீடியோ முடிவுகள் கிளிக் செய்யாமலேயே முன்னோட்டக் காட்சியாக ஓடும் என்பது தனி சிறப்பு. இன்னும் பல சிறப்பம்சங்கள் பிங்கில் உள்ளன. விரைவில் முதல் நிலை தேடி எந்திரமாக இதை மாற்றுவோம்” என்கிறார் மைக்ரோசாப்ட் பிங்கின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *