சென்னை : பிளஸ் 2 அரசுப்
பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற றவர்க்கு 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பெற்றவர்க்கு 30 ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடம் பெற்றவர்க்கு 20 ஆயிரம் ரூபாய் என பரிசுத் தொகை தொகையை உயர்த்தி சாதனை படைத்த மாணவ, மாணவியர்க்கு பரிசுத்தொகை – பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் கருணாநிதி வழங்கினார். முதலிடம் பிடித்த மாணவர் ரமேஷ் உட்பட பலருக்கு பரிகள் வழங்கப்பட்டன . பள்ளிக் கல்வியில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து தமிழக அரசின் தேர்வுத் துறை நடத்தும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் குவித்து, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றுச் சாதனைகள் படைக்கும் மாணவ – மாணவியருக்கு, பி.இ., எம்.பி.பி.எஸ்., உட்பட அவர்கள் விரும்பிப் பயிலும் பட்டப் படிப்பிற்கான உயர்கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்கும் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது .
Leave a Reply