இந்தியத் தேர்தல் முடிவுக்குக் காத்திருந்த தலைவர் பிரபாகரன்

posted in: மற்றவை | 0

prabakaran21இந்திய லோக்சபாத் தேர்தல் முடிவைக் கொண்டு தனது அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் காத்திருந்ததாக இந்திய செய்திச் சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இந்திய லோக்சபாத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லது மூன்றாவது அணி வெற்றி பெற்று புதுடில்லியில் ஆட்சியமைக்கும் எனப் பிரபாகரன் எதிர்பார்த்திருந்ததாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மே 16 ம் திகதி வரை இந்தியத் தேர்தல் முடிவுகளுக்குப் பிரபாகரன் காத்திருந்த நேரம், இலங்கை இராணுவத்தினர் தமது திட்டங்களை மாற்றி புலிகளின் தலைவர்கள் தப்பியோடுவதற்கிருந்த அனைத்து வழிகளையும் மூடிவிட்டதாக அந்த செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

“இறுதி நேரத்தில் யாராவது தலையிட்டு மோதல்களை நிறுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் பிரபாகரன் இருந்துள்ளார்” என இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தச் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இந்தியாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று வருகிறது என்பதை அறிந்து கொண்ட விடுதலைப் புலிகள், தமது கட்டுப்பாட்டிலிருந்த பொதுமக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *