இலங்கையில் மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என கோரி அழுத்தம் கொடுக்கும் முகமாக மலேசியாவில் உள்ள இந்திய வர்த்தக சம்மேளனம் இலங்கையுடனான வர்த்தகத்தை பகிஸ்கரிக்குமாறு கோரியுள்ளது.
சம்மேளனத்தின் தலைவர் பி. சிவகுமார் மலேசியாவில் உள்ள அனைத்து இந்திய நிறுவனங்களையும் இதற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளார். அத்துடன் அனைத்து வர்த்தகத்துறையும் மனிதாபிமான அடிப்படையில் இந்த அழுத்தத்தை கொடுக்க முன்வர வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இலங்கையில் அகதிகளாக உள்ள தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்,
நிவாரணக்குழுக்கள் அனுமதிக்கப்பட வேண்டும்,
செய்தியாளர்கள் யுத்த இடம்பெற்ற பிரதேசங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்,
போன்ற கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.
Leave a Reply