ஈராக்-30ம் தேதி முதல் யுஎஸ் படைகள் வெளியேற்றம்

posted in: உலகம் | 0

பாக்தாத்: ஈராக்கிலிருந்த அமெரிக்க படைகள் வரும் 30ம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற துவங்குகின்றன. இதை கொண்டாடும் விதமாக ஈராக் வரும் 29ம் பொது விடுமுறை அறவித்துள்ளது.

ஈராக் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், ராசாயன ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறி அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதே நேரத்தில் ஈராக் அதிபர் சதாம் உசேனும் அந்நாட்டில் இருக்கும் அணு ஆயுதங்களை சோதனையிட அனுமதி மறுத்துவிட்டார்.

இதையடுத்து அமெரிக்கா, ஈராக் மீது படையெடுத்தது. சதாம் உசேன் கைது செய்யப்பட்டு கடந்த 2006, டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

இதை தொடர்ந்து அமெரிக்க அரசு, ஈராக்கில் புதிய ஆட்சியை ஏற்படுத்தியது. ஆனால், அங்கு தொடர்ந்து தற்கொலை படை தாக்குதல் உள்ளிட்ட தீவிரவாத சம்பவங்கள் அதிகரித்து வந்ததால் அமெரிக்கா தனது படைகளை அங்கேயே நிறுத்தி வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், ஈராக் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அதன்படி அமெரிக்கா வரும் 30ம் தேதி முதல் தனது படைகளை கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் வாங்க இருக்கிறது.

வரும் 2011 இறுதியில் மொத்த அமெரிக்க படையும் நாடு திரும்பிவடும் என கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க ராணுவம் கடந்த இரண்டு வாரங்களாக செய்து வருகிறது.

மேலும், அதன் பின்னர் அங்கு இருக்கும் மற்ற அமெரிக்க படைகள் ஈராக் நாட்டின் நகரங்களுக்கு வெளியில் முகாமிட்டிருக்கும், ஈராக் அரசு உதவி கேட்டால் மட்டும் நகரங்களுக்குள் நுழையும் என தெரிகிறது.

தங்கள் நாட்டை ஆக்கிரமித்து இருப்பதாக அமெரிக்க படைகள் நாடு திரும்பவது தங்களுக்கு கிடைத்த வெற்றி என தற்போதைய ஈராக் பிரதமர் நூரி அல் மேலிகி தெரிவித்துள்ளார். மேலும், இதை விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ள ஈராக் அரசு வரும் 29ம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈராக்கில் வன்முறை, தற்கொலை படை தாக்குதல் சம்பவம் குறைந்து வந்த நிலையில், தற்போது அமெரிக்க ராணுவம் வெளியேறும் செய்தி அறிந்தவுடன் அதிகரித்துள்ளன. நேற்று பாக்தாத் மார்கெட் பகுதியில் நடந்து குண்டுவெடிப்பில் சுமார் 72 பேருக்கு பலியாயினர்.

அமெரிக்க படைகள் திரும்பும் நிலையில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டியது ஈராக் பிரதமர் நூரி அல் மேலிகிக்கு பெரும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *