உலகில் அழகான கட்டடங்கள் ஆயிரம் இருக்க, அசிங்கமான கட்டடம் எது என்று கேட்டால் வடகொரியாவில் உள்ள ரியூக்யாங்க் ஓட்டலை காட்டுகின்றன அந்த ஊர் பத்திரிகைகள்.
வடகொரியா, பியாங்யாங் நகரில் இருக்கிறது 105 மாடிகளை கொண்ட ரியூக்யாங்க் ஓட்டல். கிட்டத்தட்ட 20 வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் நிற்கும் இந்தக் கட்டடம்தான் உலகின் அசிங்கமான கட்டடம் எனக் கருதப்படுகிறது.
1987ஆம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஓட்டலின் கட்டுமானப் பணிகள் கடந்த 1992 ஆம் ஆண்டு திடீரென நிறுத்தப்பட்டன. இதில் கட்டப்பட்டுள்ள 3 ஆயிரம் அறைகள் ஏதோ தேவதை கதைகளில் வரும் ஆச்சரிய குகைகள் போல காட்சியளிக்கின்றன. பல வருடங்களாக பூசப்படாமல் சுவர்கள் இற்றுப்போய் பார்க்கவே பயமுறுத்தும் வகையில் இது இன்று நின்று கொண்டிருக்கிறது. இந்த ராட்சத கட்டடத்தை இரவில் பார்க்கத்தான் துணிச்சல் அதிகம் வேண்டும்.
இந்த கட்டடம் என்றைக்காவது பூர்த்தியாகுமா என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். வட கொரியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலையும், சுற்றுலாப் பயணிகள் மருந்துக்குகூட எட்டிபப் பார்க்க வாய்ப்பில்லாத பகுதி பியாங்யாங் என்பதாலும் மாற்றம் வர வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
முதலீடாக போடப்பட்ட கோடிக்கணக்கான பணம் வெறும் வெத்து கட்டடமாக நிற்பது கொடுமைங்க.
Leave a Reply