புதுடில்லி: கடுமையான நிதி நெருக்கடி
காரணமாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தில், ஊழியர் களுக்கான ஜூன் மாத சம்பளம், 15 நாள் தாமதமாக வழங்கப்பட உள்ளது.ஏர் இந்தியாவில் 33 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
சர்வதேச பொருளாதார நெருக்கடி விளைவாக, நடப்பு நிதியாண்டில் ஏர் இந்தியாவில் 4,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும், இந்நிறுவனத்தில் 2,226 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த ஆண் டை விட, இவ்வாண்டில் நஷ்டம் பெரிதும் அதிகரித்து இருப்பதால், இந்நிறுவனம் அதிக நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.இதன் காரணமாக, ஜூன் மாதத்துக்கு உரிய பணியாளர் சம்பளம் பட்டுவாடாவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாத சம்பளம், ஜூலை 15ம் தேதி வழங்கப்படும் என்று சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. நஷ்டம் பெரிதும் அதிகரித்து இருப்பதால், புதிய விமானங்கள் கொள்முதலும் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
Leave a Reply