ஒன்பதாம் வகுப்பிலேயே காதலா?: மகளை கொலை செய்த தந்தை

posted in: மற்றவை | 0

father-killa-daughterஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் காதலித்ததால் ஆத்திரமடைந்த தந்தை அவளைக் குத்திக் கொன்றார். சென்னையில் நடந்த இந்த துயரச் சம்பவத்தில் காவல்துறையிடம் சரண்டர் ஆனார் தந்தை.

புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சலீம்ஷேக்.

இவர் தனது மகள் யாஸ்மினை கத்தியால் குத்திக் கொன்றார். காதலனுடன் ஓடியதால் ஆத்திரம் அடைந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.

கைதான சலீம்ஷேக் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

”நான் ஆட்டோ டிரைவராக இருக்கிறேன். எனக்கு சூரியபானு, நிஷா என்ற 2 மனைவிகள் உள்ளனர்.

ஒவ்வொரு மனைவிக்கும் 2 குழந்தைகள் வீதம் 4 குழந்தைகள் உள்ளன. 2-வது மனைவிக்கு மனநலம் சரியில்லை. எனவே 4 குழந்தைகளையும் முதல் மனைவிதான் கவனித்து வருகிறார்.

நான் படிக்காததால் ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்தேன். என் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க ஆசைப்பட்டேன்.

யாஸ்மின் நன்றாக படித்து வந்தாள். அவளை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எங்கள் குடும்பத்தில் யாஸ்மின்தான் படித்து பெரிய ஆளாக வருவாள் என்று கனவு கண்டேன். அவள் ஆசைப்பட்டு கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தேன்.

ஒருநாள் நான் சவாரி சென்றபோது யாஸ்மின் இஸ்மாயிலுடன் நெருக்கமாக சுற்றியதை பார்த்தேன். வீட்டுக்கு வந்ததும் கண்டித்தேன்.

முதலில் நன்றாக படித்து வேலைக்கு செல். அதன் பிறகு உனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான். காதல் கீதல்னு படிக்கிற வயதில் மனதை அலைபாய விடாதே. உன் படிப்பு வீணாகி விடும். வாழ்க்கையும் சீரழிந்து விடும் என்று புத்திமதி சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாள்.

ஆனாலும் அவள் காதல் மோகத்தில் இருந்து விடுபடவில்லை. பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு காதலனோடு சுற்றி இருக்கிறாள்.

அதை கேள்விப்பட்டு மீண்டும் கண்டித்தேன். காலில் சூடும் வைத்தேன். வலியால் துடித்தவள் இனிமேல் தப்பு செய்யமாட்டேன் என்று குரான் மீது சத்தியம் செய்தாள். இனி திருந்தி விடுவாள் என்று நம்பினேன்.

ஆனால் அவள் திருந்தவில்லை. வீட்டை விட்டு ஓடி போய் எங்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தினாள்.

கண்டு பிடித்து இழுத்து வந்தேன். இனியாவது ஒழுங்காக இரு. நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன். அவள் கேட்கவில்லை. இஸ்மாயிலைத்தான் கல்யாணம் செய்வேன் என்று அடம் பிடித்தாள்.

இப்படிப்பட்ட பிள்ளை இருப்பதை விட தொலைந்து போகட்டும் என்று எனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் குத்தி கொன்றேன்”

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *