காற்றுப்புக முடியாத அறைக்குள் வைத்து கூட்டமைப்பினரை பூட்ட வேண்டும் – அமைச்சர் மேர்வின் சில்வா

posted in: மற்றவை | 0

marvin-200 தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர்களை காற்று புக முடியாத அறைக்குள் வைத்து பூட்ட வேண்டும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

புலிகளை தோற்கடித்த நாங்கள் இன்னும் மூன்று வருடங்களில் நாட்டைக் கட்டியெழுப்புவோம். எனினும் புலிகளிடம் சம்பளம் பெற்ற ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் இருக்கின்றனர் என்றும் அமைச்சர் மேலும் சொன்னார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை முதலீட்டுச் சபை (திருத்த), வாழ்க்கைத் தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனம் ஆகிய சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

படை வெற்றிகளை கொண்டாடுகின்ற வேளையில் டெங்கு நுளம்பு மற்றும் ஊடக சுதந்திரம் பற்றி ஊடகங்கள் ஆர்ப்பரிக்கின்றன. எனினும் சில ஊடகங்களும் அரசியல்வாதிகளும் புலிகளிடம் சம்பளம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *