வன்னியில், கிளிநொச்சியை மீட்கும் இராணுவ நடிவடிக்கையில்
ஈடுபட்டிருந்த 57 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனியின் பிரதித் தூதராக நிய மிக்கப்பட்டுள்ளார்.
விரைவில் அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வார் என்று அரசவட்டாரங் கள் தெரிவித்தன.
வன்னி மீதான இராணுவ நடவடிக்கை மூன்று வருடத்துக்கு முன்னர் ஆரம்பிக்கப் பட்டபோது அதில் பங்கேற்ற 57 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மடுத்தேவாலயம், கொக்காவில் நகரம், துணுக்காய், மல்லாவி, கிளிநொச்சி ஆகிய பகுதிகளை மீட்பதில் முன்னின்று பெரும் பங்காற்றினார் என்று அரசவட் டாரங்கள்தெரிவித்தன.
Leave a Reply