கோவைக்குற்றாலம்… இனி குளிக்க மட்டுமல்ல!நடுக்காட்டில் தொங்கு பாலம்; உயர் கோபுரம்:வன விலங்குகளை காண வனத்துறை ஏற்பாடு

posted in: மற்றவை | 0

tbltnsplnews_34491693974கோவை : கோவைக்குற்றாலத்தில் சுற் றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில், சூழல் சார்ந்த சுற் றுலா மேம்பாட்டுப் பணிகளை வனத்துறை மேற் கொண்டு வருகிறது.

கேரள வனத்துறைக்குச் சொந்தமான வனப்பகுதிகளில் சூழல் சார்ந்த சுற்றுலா மேம் பாட்டுப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.இதனால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், கேரள அரசுக்கும் அதிகளவில் வருவாய் கிடைத்து வருகிறது.ஆனால், தமிழக வனப்பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதே இல்லை. மாறாக, வனத்துறைக் குச் சொந்தமான விடுதிகளில் அத்துமீறல் கள் அதிகமாக நடந்து வருகின் றன. உதாரணமாக, தமிழக வனத் துறை வசமுள்ள டாப்ஸ்லிப்பில் பல விதிமீறல்கள் பகிரங்கமாக நடக்கிறது.

இவற்றை வனத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதே இல்லை. இதே சுற்றுலாப் பயணிகள், டாப்ஸ்லிப்பைத் தாண்டி, கேரள வனத்துறைக் குச் சொந்தமான பரம்பிக்குளத் துக்குச் சென்று விட்டால், ஆட் டம் போட முடிவதில்லை.அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் அதிகம். ஆனால், அங்குள்ள விடுதிகளின் பராமரிப்பு, படகுப் பயணம், தீவுக்குள் ஒரு நாள் என இயற் கையை ரசிப்பதற்கு செய்யப்பட் டுள்ள பல வித ஏற்பாடுகள், கேரளாவுக்கு சுற் றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றன.பரம்பிக்குளம் அணைப்பகுதி, கேரளாவில் இருந்தாலும் தமிழக அரசின் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

இதேபோன்று, சிறுவாணி அணைப் பகுதியிலும் சூழல் சுற்றுலா என்ற பெய ரில் நுழைவுக் கட்டணம், வாகன கட்டணமும் கேரள வனத் துறை வசூலித்து வருகிறது.ஆனால், தமிழக வனப்பகுதிகளில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு பெரிய அளவிலான முயற்சிகள் எடுக் கப்படவில்லை. அதைப்பற்றி அரசும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இங்குள்ள வனத் துறையினருக்கு வி.ஐ.பி.,க் களைக் கவனிப்பதே முக்கிய வேலையாகவுள்ளது. ஆங்காங்கே ஒரு சில இடங் களில் சூழல் சுற்றுலாவுக்கான சிறுசிறு திட்டங்களை அந்தந்த வனத்துறை அதிகாரிகள், தங் களது சொந்த முயற்சியில் செய்து வருகின்றனர். இந்த வரிசையில், கோவை வனக் கோட் டத்தில் முயற்சிகள் தொடர்கிறது.

ஏற்கனவே, இதே வனக் கோட்டத்தில் காரமடை வனச்சரகத்துக்குட்பட்ட பரளிக்காட் டில் பரிசல் பயணம், பழங்குடியினரின் உணவு வகைகள் என சூழல் சுற்றுலா திட் டத்தை வனத்துறை சிறப்பாக நடத்தி வருகிறது. அடுத்ததாக, கோவைக் குற்றாலத்தில் பல்வேறு பணிகளும் நடந்து வருகின்றன.கடந்த ஆண்டில் மரங்களால் மட்டுமே ஆன ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறுவர் பூங்காவை வனத்துறை அமைத் தது. மலையேற்றம் மற்றும் வன விலங்குகள் கணக்கெடுப் புக்கு வரும் ஆர்வலர்களுக்காக 4 அறைகள் கொண்ட ஓய்வு விடுதி கட்டப்பட்டு வருகிறது.

இதே பகுதியில் தேக்கு மரங் களுக்கு இடையில் தொங்கு பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. 150 மீட்டர் நீளத்துக்கு 20 அடி உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. இதில் நடந்து செல்வது (கெனாபி வாக்) “த்ரில்’ ஆன அனுபவமாக இருக்கும்.சூழல் சுற்றுலா மேம்பாட் டின் மற்றொரு பணியாக காட்சி கோபுரமும் அமைக்கப் பட்டு வருகிறது. இதிலிருந்து சுற்றிலும் உள்ள மலைக்காடுகளை வெகுவாக ரசிக்க முடியும்; வன விலங் குகளின் நடமாட்டத்தையும் கண் காணிக்க முடியும். இந்த பணியும் முடியும் தறுவாயில் உள்ளது.இதற்காக 79 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. சூழல் சுற்றுலாவை மேம் படுத்த கோவை வனத்துறை அதிகாரிகள் எடுத்துள்ள முயற்சி பாராட்டத் தக்கது என் றாலும், கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்தினால், சுற்றுலாவுடன் சூழலும் நன்றாயிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *