சத்தீஷ்காரில் அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிவரும் மாவோயிஸ்ட் கம்யூனிசுடுகளின் தாக்குதலில் 11 போலீசார் பலியாகியுள்ள்னர்.
சத்தீஷ்கார் மாநிலம் டான்டீவாடா மாவட்டம் கோகனரா கிராமம் பகுதியில் 2 டிரக்குகள் மற்றும் ஒரு ஜீப்பில் மத்திய ரிசர்வ் படை போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது மாவோயிஸ்டு தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கச்செய்தனர். இதில், ஒரு வாகனம் சிக்கியது.
இதைத்தொடர்ந்து அதில் பயணம் செய்த 11 போலீசார் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார்கள். 11 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்த போலீசார் ஜக்தல்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Leave a Reply