இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து தமது உல்லாசப் பயணத்துறையை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை வரலாற்றில் முதல் தடவையாக இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து தமது உல்லாசப் பயணத்துறையை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
சீன நாட்டு உல்லாசப் பயணிகளை தமது பிராந்தியத்திற்கு கவர்ந்திழுக்கும் முயற்சிகளை அவர்கள் கூட்டாக முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக சிறிலங்காவின் உல்லாசப்பயணத்துறை அமைச்சர் மிலிந்த மொறகொட மற்றும் சீனாவுக்கான இந்திய தூதுவர் நிருபாம ராவ் ஆகியோர் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
உல்லாசப்பயணத்துறைக்கு சிறிலங்கா சிறந்த இடம் என்ற பிரச்சாரத்தை தாம் முன்னெடுக்க போவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவை குறிவைத்தே சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை செயற்பட்டு வருவதாக மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.
சீனாவின் உல்லாசப் பயணத்துறை புள்ளி விபரங்களின் படி 4.5 மில்லியன் மக்கள் உல்லாசப் பயணிகளாக ஆண்டுதோறும் பயணம் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply