சென்னை மத்திய சிறை இருந்த இடத்தில் மருத்துவமனை

posted in: மற்றவை | 0

17_007சென்னை சென்டிரல் எதிரே உள்ள பழமையான மத்திய சிறை கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. கடந்த 1837-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்தசிறை மிகப்பழமையான சிறைகளில் ஒன்றாகும்.


இதில் ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்கள் தொடங்கி முதல்-அமைச்சர் கருணாநிதி, துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வரை அடைக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்துள்ளார்கள்.

இத்தகைய பெருமை வாய்ந்த இந்தசிறையில் இட நெருக்கடி காரணமாக கைதிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வந்தது. இதனால் ஆசியா விலேயே மிகப்பெரிய சிறை புழலில் அமைக்கப்பட்டு கைதிகளும் அங்கு மாற்றப்பட்டனர். ஆளில்லா கட்டி டமாக நின்ற மத்திய சிறை வளாகம் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப் பட்டிருந்தது.

13 ஏக்கர் 80 சென்ட் நிலப்பரப்பளவுள்ள இந்த சிறை வளாகத்தை இடித்து தள்ளி விட்டு அரசு மருத் துவமனைக்கு கூடுதல் கட்டிடம், மெட்ரோ ரெயில், மின்வாரியம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி இதில் 10 ஏக்கர் பரப்பளவில் அரசு பொது மருத்துவ மனைக்கு புதியகட்டிடங்கள் நவீன வசதியுடன் கட்டப்படுகிறது. 2 ஏக்கர் பரப்பளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. 1 ஏக் கரில் நகரில் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான அதிக டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட உள்ளது. மத்திய சிறை இருந்ததன் நினை வாக 80 சென்ட் நிலம் சிறை துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்துறையின் வசமிருந்த இந்த கட்டிடம் பொதுப்பணி துறையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. பொதுப்பணி துறை டெண்டர் விட்டது. அதன்படி மத்திய சிறை சாலையை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *