சென்னை விமானநிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும்பொழுது கைத்துப்பாக்கி தோட்டவுடன் வந்த அமெரிக்க பயணியை காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு நேற்று இரவு 8.30 மணிக்கு தனியார் விமானம் புறப்பட தயாராக நின்றது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் சூட்கேஸ் மற்றும் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அமெரிக்காவை சேர்ந்த ஸ்மித்தர் (58) என்பவரின் கைப்பை மற்றும் சூட்கேசை சோதனை செய்த போது வெடி குண்டு இருப்பதற்கான சைரன் ஒலித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடகே பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஸ்மித்தரின் கைப்பை மற்றும் சூட்கேசை தனியாக எடுத்து திறந்து பார்த்து சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு கைத்துப்பாக்கியும் 35 தோட்டாக்களும் இருந்தன.
இதைத் தொடர்ந்து அவரது பயணத்தை ரத்து செய்தனர். பின்னர் அவரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அவர் அதிகாரிகளிடம் கூறுகையில் அமெரிக்காவில் விமான பயணத்தின் போது கைத் துப்பாக்கி கொண்டு செல்ல அனுமதி உள்ளது. துப்பாக்கி பயன்படுத்துவதற்கான லைசென்சும் என்னிடம் உள்ளது லைசென்சை அமெரிக்காவில் இருந்து பேக்சில் அனுப்ப சொல்கிறேன். நான் இருதய நோயாளி. சென்னையில் சிகிச்சை பெறுவதற்காக வந்தேன். சிகிச்சை முடிந்ததும் இங்கிருந்து புறப்பட்டு செல்கிறேன் என்றார்.
அவரை அதிகாரிகள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply