ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கொலை திட்டமிட்டதாக கூறப்பட்டு 3 தமிழர்கள் இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் ராஜகிரிய பிரதேசத்திலும் மற்றையவர் வாழைசேனை பிரதேசத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேல்மாகாண குற்றத் தடுப்பு பிரிவினரால் ராஜகரிய பிரதேசத்தில் வைத்து கடந்த 15ம் மற்றும் 16ம் திகதிகளில் இரண்டு தமிழர்களும் வாழைச்சேனையில் வைத்து கடந்த 17ம் திகதி ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைதான தமிழர்கள் தற்போது பொரளை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply