லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரை வென்ற மகிழ்ச்சியுடன் டுவென்டி்-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007ல் நடந்த முதல் டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் வீழ்த்தி கோப்பை வென்றது. இந்நிலையில் நேற்று இரண்டாவது முறையாக டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் பைனலில் விளையாடிய யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இலங்கையை வீழத்தி கோப்பை வென்றது.
இந்நிலையில் கோப்பை வென்ற மகிழ்ச்சியுடன் டுவென்டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கோப்பையை என் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். இது தான் நான் விளையாடிய கடைசி டுவென்டி-20 போட்டி. இந்த போட்டியுடன் டுவென்டி-20 போட்டியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். எனக்கு தற்போது 34 வயதாகிவிட்டது. இந்த வயதுக்கு மேல் டுவென்டி-20 விளையாட முடியாது.
பாகிஸ்தான் வாருங்கள்…
சமீபகாலமாக பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. அனைத்து நாடுகளும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். அப்போது தான் எனது மகனும், பக்கத்து வீட்டு சிறுவர்களும் கிரிக்கெட் விளையாட அதிக ஆர்வம் காட்டுவார்கள். பாகிஸ்தானில் கிரிக்கெட்டை வளர்க்க முடியும்.
பாகிஸ்தான் வீரர்களாக சிறப்பாக விளையாடினார்கள். அதிரடி அப்ரிதி ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தை என்னால் நம்ப முடியவில்லை. நாங்கள் உலக கோப்பை தொடருக்கு முன்பாக பயிற்சி போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் லீக் போட்டி ஆகியவற்றில் தோல்வியடைந்தோம்.
இதனால் நாங்கள் சூப்பர்-8 தொடருக்கு முன்னேற மாட்டோம் என விமர்சித்தார்கள். தொடரை தோல்வியுடன் துவக்கினாலும் இறுதியில் கோப்பையுடன் நாடு திரும்புகிறோம் என்றார் யூனிஸ்.
Leave a Reply