கொடைக்கானல்: தரமான ரோடுகள் உள்ள நாடுகளில் இந்தியா விரைவில் முதலிடம் பெறும் என்று இந்திய ரோடுகள் காங்கிரஸ் தலைவர் தேஷ்பாண்டே தெரிவித்தார். இந்தியன் ரோடுகள் காங்கிரஸ் அமைப்பின் 188-வது கவுன்சில் கூட்டம் கொடைக்கானலில் துவங்கியது. இதில் அவர் பேசியதாவது:
திட்டமிடல், நிர்மாணித்தல்,வடிவமைத்தல்,கட்டமைப்புகளை பராமரித்தல் ஆகியவற்றிற்கான ஆலோசனை வழங்குவது ரோடுகள் காங்கிரசின் முக்கிய பணி.தரமான ரோடுகள் அமைப்பதில் இவ்வமைப்பு ஆசிய கண்டத்தில் முக்கிய இடத்தை விரைவில் பிடிக்கும்.தேசிய நெடுஞ்சாலை ரோடுகளில் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் ரோடுகள் நன்றாக உள்ளது.
கண்காணிப்பு அவசியம்: ரோடு அமைக்க, பராமரிக்க ஒதுக்கப்படும் நிதிக்கும், செலவிற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. எனவே, அரசும் தனியார் நிறுவனங்களும் சேர்ந்து சில திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசியம். இதுதொடர்பாக டில்லியில் ஆகஸ்ட் 28,29ல் கருத்தரகு நடைபெறுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிப்பதில் கவனம் செலுத்துவது போல்,ரோடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதும் அவசியம்.
ஆராய்ச்சிக்கு நிதி: ரோடுகளின் தரத்தை உயர்த்தும் வகையில் நவீன தொழில்நுட்ப ஆராய்ச்சியை அதிகபடுத்துவது அவசியம். புதிய திட்டங்களுக்காக அறிவிக்கப்படும் நிதியில் 2 சதவீதம் ஆராய்ச்சிக்கு ஒதுக்குவது அவசியம். தரமான ரோடுகள் உள்ள நாடுகளில், இந்தியா விரைவில் முதலிடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
Leave a Reply