திண்டுக்கல்: திருமண நிதி உதவி பெறும்
திட்டத்தில் உதவித்தொகை பெற ஊராட்சித் தலைவர் சான்று தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஏழைகளுக்கு வழங்கும் திருமண உதவித்தொகை பெற ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் திருமணம் முடித்த பலர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் போது, வருமான சான்றிதழுக்கு பதிலாக “தாங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர்’ என்பதை நிரூபிக்க ஊராட்சி தலைவரிடம் சான்று பெற்று வர வேண்டும் என உத்தரவு இருந்தது.இதனால் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டது. 10ம் வகுப்பு தேர்வு எழுதிய,18 வயது நிரம்பிய, திருமணம் ஆன பெண்கள் உதவித்தொகை பெற வருவாய்த்துறையிடம் வருமான சான்று பெற்று விண்ணப்பித்தால் மட்டும் போதும். வேறு எந்த சான்றுகளும் தேவையில்லை என சமூகநலத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply