நக்சலைட் போராளிகளை ஒழிக்கும் பணியில் கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவ படையினரை ஈடுபடுத்த வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதாவது:
நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்டு ள்ள ஜார்கண்ட், ஒரிசா, சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்கள் நக்சல் ஒழிப்பு பணியில் கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவப் படையினரை ஈடுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளன.
நக்சல்கள் ஒழிப்பு மட்டுமல்லாது. தீவிரவாத ஒழிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளதால், கூடுதல் வீரர்களை அனுப்புவது என்பது இயலாத காரியம் என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை மற்றும் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றிடம் நகசல்கள் ஒழிப்பு பணிக்கு வீரர்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். இவ்வாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
Leave a Reply