டெல்லி: நாட்டில் மாவோயிஸ்ட் நக்ஸலைட்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.
நக்ஸல்கள் நடமாட்டம் உள்ள இடங்களை கண்காணிக்க உதவும் செயற்கைக்கோளை மிக விரைவில் தயாரிக்கும், அதை விரைவில் விண்ணி்ல் செலுத்துமாறும் இஸ்ரோவிடம் மத்திய உள்துறை கேட்கவுள்ளது.
நக்ஸல்களுக்கு எதிரான ஆபரேசனில் ஈடுபட்டு துணை ராணுவப் படையினர் தந்த யோசனையின் அடிப்படையில் உள்துறை இந்த முடிவுக்கு வந்துள்ளது.
பிகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருந்து வருவதால் அவர்களது இருப்பிடங்களை அறிவதிலும் அவர்களை ஒடுக்குவதிலும் பெரும் சிரமம் நிலவி வருகிறது.
இந்நிலையில் செயற்கைக் கோள் மூல்ம் நக்ஸல்கள் இருப்பிடம், நடமாட்டத்தை எளிதில் கண்காணிக்க முடியும் என துணை ராணுவம் கருதுகிறது.
மலைகள் அடர்ந்த இந்த காட்டு்ப் பகுதிகளில் பாதைகள் இல்லாததால் நக்ஸலைட்டுகள் மீதான நடவடிக்கை பாதுகாப்புப் படையினருக்கு பெரும் சவாலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply