விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச உறவு தலைவர் பத்மநாதனை பிடிக்க இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பத்மநாதன் எங்கிருந்தாலும் அவரைப் பிடித்து தங்களிடம் ஒப்படைக்க சர்வதேச போலீஸின் (இண்டர்போல்) உதவியை நாடியுள்ளோம். அவர் குறித்த விவரங்களை சர்வதேச போலீசாருக்கு அனுப்பியுள்ளோம் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகலகாம
கூறியுள்ளார்.
புலிகளை தோற்கடித்ததன் மூலம் பயங்கரவாதத்தை தோற்கடித்ததாகவே நினைக்கிறோம். எனினும், நாங்கள் இத்துடன் அமைதியாக இருந்துவிட முடியாது. இன்னும் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன என்றும் பொகலகாம தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறிவந்தாலும், அவர்கள் இன்னும் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்றே இலங்கை அரசு கருதுகிறது.
அதிலும் உலக நாடுகளில் உள்ள புலிகள் அமைப்பைச் சேர்ந்த பத்மநாதன் உள்ளிட்ட தலைவர்கள் அந்த அமைப்புக்கு எப்படியும் மீண்டும் புத்துயிர் ஊட்டிவிடுவார்கள் என்று இலங்கை கருதுகிறது. இதனால் அவர்களை பிடிக்க தற்போது தீவிரம் காட்டி வருகிறது. சர்வதேச போலீஸின் உதவியையும் கேட்டுள்ளது.
Leave a Reply