மும்பை: பாகிஸ்தானுக்குள்ளிருந்து இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுறுவிப் பறந்த ரஷ்ய தயாரிப்பு ராணுவ விமானத்தை இந்திய விமானப்படையினர் வலுக்கட்டாயமாக தரையிறக்கினர்.
பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு நேற்று இரவு ஏஎன்-124 என்ற ராணுவ சரக்கு விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது அது திடீரென இந்திய வான் பகுதிக்குள் நுழைந்து பறந்தது.
இதைப் பார்த்த விமானப்படையினர் உடனடியாக அந்த விமானத்தை வெளியேறுமாறு எச்சரித்தனர். இதையடுத்து இரு விமானப்படை விமானங்கள் விரைந்தன. சம்பந்தப்பட்ட விமானத்தை மும்பை [^]க்குத் திருப்புமாறு உத்தரவிட்டனர். மேலும், அந்த விமானம் தப்பிப் போய் விடாமல் கூடவே வந்த இரு விமானப்படை விமானங்களும், மும்பையில், அந்த பாகிஸ்தான் விமானத்தை தரையிறக்கச் செய்தன.
தரையிறக்கப்பட்ட விமானம் ரஷ்யத் தயாரிப்பு விமானம் ஆகும். ஆனால் விமானத்தில், அமெரிக்க ராணுவக் குறியீடுகள் உள்ளன. விமானத்தில் ஐந்து ஊழியர்கள் இருந்தனர். வெடிபொருட்களும் இருந்தன.
விமானத்தில் இருந்தவர்களிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்லனர்.
இந்த விமானம் மொரீஷீயஸ் அருகே உள்ள டிகோ கார்சியா தீவிலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த விமானம் காந்தஹாருக்குப் போய்க் கொண்டிருந்ததாகவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply